தித்திக்கும் மாம்பழத்தின் ஏற்றமதி தடையால் விலை சரிந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் பழங்கள் ஆயிரம் இருந்தாலும் மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு, அந்த வகையில் இந்த வருடம் மாம்பழம் விரும்பிகளுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்ஸா மாம்பழத்திற்கு இந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் தடை வதிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்போன்ஸா மாம்பழங்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

மாம்பழங்களின் அதிகப்படியான விளைச்சல் மற்றும் ஏற்றுமதி தடையினால் இந்திய சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில்

தற்போது இந்தியாவில் வெயிலின் தாக்கும் அதிகளவில் உள்ளது இதனால் மாம்பழங்கள் வரைவாக பழுத்துவிடுகிறது. இதனால் விற்பனையாளர்கள் பழத்தினை விரைவாக விற்பனை செய்ய முற்ப்பட்டுள்ளனர்.

விலை குறைவு

விலை குறைவு

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மாம்பழத்தின் விளைச்சல் அமோகமாக இருந்ததாது. வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், ஐரோப்பிய சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் உயர்தர மாம்பழங்களும் மே 1 முதல் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது.

மும்பை சந்தைய

மும்பை சந்தைய

தினமும் விற்பனைக்காக 60,000 பெட்டி மாம்பழங்கள் மட்டுமே மும்பை சந்தைக்கு வரும், ஆனால் மே 1 முதல் தினமும் 2 இலட்ச பெட்டிகள் குவிந்து வருகிறது. இதனால் மாம்பழங்களின் விற்பனை சிறப்பாகவும் மலிவாகவும் உள்ளது. இதனால் ஒரு பெட்டி மாம்பழத்திற்கு 800 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து 2012-13ஆம் காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அஸ்ரேலியா மற்றும் பல நாடுகளுக்கு சுமார் 55,000 டன் வரை மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஐரோப்பிய சந்தையில் தடைவிதிக்கப்பட்டதால் இந்தியாவில் மாம்பழத்தின் விலை குறைந்துள்ளது.

ஏன் இந்த தடை

ஏன் இந்த தடை

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழத்தில் சில வகை புழுக்கள் மற்றும் பூச்சிகள் வருவாதல் சில காலங்களுக்கு இந்திய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் ஐரோப்பிய சந்தையில் தடை வதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மாம்பழத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் கத்திரிக்காய், பாகற்காய் மற்றும் புடலங்காய் ஆகியவற்றிற்கும் தடை வதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mangoes turn juicier! Price of premium Alphonso variety almost halves

Alphonso mangoes have turned doubly sweeter for domestic consumers this season as prices of the most premium variety of the king of Indian fruits have almost halved following an increase in supply and the possible impact on other importers of the ban clamped by the European Union.
Story first published: Monday, May 5, 2014, 17:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X