ஆசியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆசியாவின் டாப் 10 சுயமுன்னேற்ற பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் திலீப் சங்வி இடம் பெற்றுள்ளார்.

 

பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வுகளை நடத்திவரும் வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார் ஷங்வி. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் இவர்தான்!

சன் பார்மா நிறுவனம்

சன் பார்மா நிறுவனம்

ஐந்து மருந்து தயாரிப்புகள் மற்றும் இரண்டே இரண்டு மார்க்கெட்டிங் நபர்களைக் கொண்டு சன் பார்மசூட்டிகல்ஸை 1983-ல் ஷங்வி தொடங்கினார்.

30 வருட வளர்ச்சி

30 வருட வளர்ச்சி

கடந்த 30 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ள இந்த நிறுவனம், சமீபத்தில் ரான்பாக்ஸி நிறுவனத்தை ரூ.400 கோடி ரூபாய் தொகைக்கு கையகபடுத்தியுள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி மற்றும் சாந்திலால் ஷங்வி ஃபவுண்டேசனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஷங்வியினுடைய சொத்தின் மதிப்பு ரூ.1350 கோடியாகும்.

டாப் 10
 

டாப் 10

இந்த டாப் டென் பட்டியலில் ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா-ஷிங் (ரூ.2940 கோடி) முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றவர்களில், 3 பேர் சீனாக்காரர்கள், 3 பேர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜப்பானியர், மற்றொருவர் தாய்லாந்தை சேர்ந்தவர்.

மொத்த தொகை வளர்ச்சி

மொத்த தொகை வளர்ச்சி

கடந்த வருடம் செய்த ஆய்வை ஒப்பிடுகையில் டாப் 10 சுயமுன்னேற்ற பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 52 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஆசியா செல்வத்தை சேர்க்கும் 150 வருட சக்கரத்தில் சுற்றிவருகிறது. அடுத்து வருடம் சில வருடங்களில் தனி மனிதர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்கும் என வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money
English summary

Dilip Shanghvi among Asia's richest self-made billionaires

Sun Pharmaceuticals Industries' Dilip Shanghvi has been named in the list of Asia's top ten wealthiest self-made billionaires, topped by Hong Kong business tycoon Li Ka-Shing, according to Wealth-X.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X