தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிய கர்நாடகா!! வருமான வரி வசூல்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2014ஆம் நிதியாண்டின் வரி வசூலில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி கர்நாடகம் முன்னேறியது. இதனால் தமிழ்நாடு நான்காம் இடத்திற்கு சென்றது. முதல் இடத்தை மும்பையும், இரண்டாம் இடத்தை டெல்லியும் கைபற்றியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 42,500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இது கடந்த வருடத்தை விட இந்த வருடம் 14 சதவீதம் அதிகமாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 40,000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா வரித்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில் "இந்த வருடம் கர்நாடகா மாநிலத்தில் பல ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதினால் சுமார் 59,000 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையின் காரணமாக தமிழகத்தில் உற்பத்தி, தோல் மற்றும் ஜவுளி துறைகள் கடுமையாக பாதிப்பு அடைந்தது. இதனால் தமிழகத்தின் 25 சதவீத வர்த்தகம் தடைபட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தில் சில துறைகளின் முக்கிய வளர்ச்சியால் அதிகப்படியான வரி வசூல் ஈட்டியது என வருவாய் வரித்துறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரி செலுத்துவோரி எண்ணிக்கை

வரி செலுத்துவோரி எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 24 இலட்ச மக்கள் வருவாய் வரி செலுத்தி வருகின்றனர், இதில் 20.85 இலட்ச கணக்காளர்கள் தனி நபர், 1.65 இலட்ச கணக்காளர்கள் சிறு நிறுவனங்கள், 22000 கணக்காளர்கள் பெரு நிறுவனங்கள் ஆகும். மேலும் ஆன்லைன் வரி செலுத்தும் சேவையின் மூலம் 36,000 கணக்காள்கள் தங்களது வரி பணத்தை செலுத்தியுள்ளனர்.

அதிக வரி செலுத்தியோரின் விபரம்

அதிக வரி செலுத்தியோரின் விபரம்

இந்த வருடம் அதிகமாக வரி செலுத்தியோர் பற்றிய ஆய்வை வருமான வரி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை பற்றிய விவரங்களை முழுமையாக சேகரிக்க இத்துறை முற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka overtakes Tamil Nadu in income-tax collections

Karnataka has pushed Tamil Nadu to the fourth slot in income-tax collections for the year ended March 2014. The first two slots are occupied by Mumbai and New Delhi regions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X