ரயில் டிக்கெட் முன்பதிவில் பான் எண்ணை பயன்படுத்த வேண்டாம்: ரயில்வே எச்சரிக்கை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரயில் முன்பதிவில் ஆன்லைன் சேவை வந்த பின்பு, ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் ஆன்லைன் சேவையில் பல பிரச்சனைகள் உள்ளதாகவும் இவை பல வருடங்களாக தொடரந்து வருவதாகவும் பயணிகள் தெரவிக்கின்றனர்.

 

இப்பிரச்சனை ஒரு புறம் இருக்க, வருவாய் துறை அதிகாரிகள் ரயில் முன்பதிவு போன்றவற்றிக்கு பான் எண்களை உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பல நிதி மற்றும் அடையாள மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பற்றி முழுமையாக இங்கு காண்போம்..

பான் எண்

பான் எண்

வருமான வரி செலுத்துபவர்களும், பெரு நிறுவனங்களில் பணிபுரிவோர்களுக்கும், பிஸ்னஸ் செய்பவர்களுக்கும் "பர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர்' எனப்படும், "பான்' எண் கண்டிப்பாக இருக்கும். இந்த பான் எண்ணை பல வகையில் பயன்படுத்தலாம் ரயில் டிக்கெட், வங்கி பறிமாற்றம், இணையதள சேவை என பல இடங்கள் உள்ளது.

அடையாள திருட்டு

அடையாள திருட்டு

இப்படி மக்கள் அதிகமாக உபயோகிக்கும் தளங்களில் பான் எண் போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடும் போது, இந்த எண்ணின் சொந்தக்காரரின் பெயர், முகவரி, மொபைல் எண், வயது, பாலினம் போன்ற விபரங்கள் மோசடி பேர்வழிகள் கையில் கிடைக்க நாம் வழிவகுக்கிறோம்.

மோசடி

மோசடி

இத்தகைய அடையாளங்களை தீவரவாதிகளும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த அடையாளங்களை வைத்து தீவரவாதிகள் சிலர் வங்கி செயல்பாட்டில் இறங்குவதாக வருவாய் துறை தகவல் தெரிவிக்கிறது.

மாற்று அடையாள தகவல்
 

மாற்று அடையாள தகவல்

பான் எண்ணிற்கு பதிலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம் என, வருமான வரித்துறையினர் திதரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Dept. hints ‘risk' in revealing PAN Number for train ticket reservations in Railways

Citing one’s personal account number while booking railway tickets can be a security hazard as the Indian Railway displays the PAN, name, sex and age of passengers on the reservation charts. All it takes is for someone to note down these numbers and use them for benami transactions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X