குழந்தைகளுக்கான வங்கி சேவையை துவங்க எஸ்பிஐ ரெடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கூட வங்கி கணக்குகளைத் தொடங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை துவக்க உள்ளதாக, பிடிஐ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

'நாங்கள் குழந்தைகளுக்கான கணக்குகளைத் துவக்கினாலும், வரைவோலைகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன, நாங்கள் வரைவோலைகளை மாற்றிக் கொள்வதில்லை. எனினும், வங்கிகளில் பணம் டெப்பாசிட் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கென ஒரு சிறப்புத் திட்டத்தை நாங்கள் துவக்கப் போகிறோம்', என்று SBI-ன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

ப்ளோட்டிங்-ரேட் கடன்கள்

ப்ளோட்டிங்-ரேட் கடன்கள்

ப்ளோட்டிங்-ரேட் கடன்களை முன்கூட்டியே செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதங்களை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதினால், இலாபங்களில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. நிலையான வட்டி விகிதம் கொண்ட கடன்களுக்கு வங்கிகள் முன்கூட்டியே கடனை முடிப்பதற்கு கட்டணம் விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 வங்கி சேவை

வங்கி சேவை

10 வயதுக்கும் மேற்பட்டவர்களும் சேமிப்பு கணக்குகளை தனியாகத் தொடங்கலாம், மேலும் ஏ.டி.எம் மற்றும் காசோலை வசதிகளைப் பயன்படுத்தலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்கிழமையன்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.

மைனர் வங்கி கணக்கு

மைனர் வங்கி கணக்கு

முன்னதாக மைனர்கள் நிலையான வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளை துவக்கும் போது அவர்களுடைய தாயார்களை பாதுகாப்பாளராக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பான வங்கி சேவை
 

பாதுகாப்பான வங்கி சேவை

'இணைய வழி வங்கி சேவைகள், ஏ.டி.எம்/டெபிட் கார்டு, செக் புக் வசதி போன்றவற்றை வழங்குவதில் வங்கிகள் சுயமாக முடிவெடுக்கலம். இது மைனர்களின் கணக்குகளை பாதுகாக்கும் பொருட்டாக ஓவர்ட்ராப்டுகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அது எப்பொழுதும் வரவிலேயே இருக்கும்', என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to start special scheme for children's accounts

Reserve Bank’s move to allow minors to open and operate accounts, the State Bank of India, the nation’s largest lender, said it will start a special scheme for children shortly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X