மோசமான நிலையில் இன்ஃபோசிஸ் நாராயாண.. நாராயாண.. !!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் குறைவான வளர்ச்சி மற்றும் நிறுவன குளறுபடியால் இந்நிறுவனத்தின் பங்குகள் வாங்கும் நிலையில் இருந்து தற்போது விற்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் எல்ஐசி போன்ற மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கும் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு இருப்பை குறைத்து வருகிறது.

 

மேலும் தற்போது உள்ள பங்கு சந்தை உயர்வால் இந்நிறுவனத்தின் பங்குகள் 3,254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இதுவே 6 மாத விலை குறைவை எட்டியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இன்றைய விலைக்கு நிகரான 3,274 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஏன் இந்த இந்நிறுவனத்திற்கு இத்தகைய நிலை? என்ற கேள்விக்கு பதில் பின்வரும் ஸ்லைடரில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

முதல் பிரச்சனை

முதல் பிரச்சனை

இந்நிறுவனத்திடம் இருந்த பல வாடிக்கையாளர்கள் இதர இந்திய நிறுவனங்களுக்கு சென்றது, இதனால் அதிக லாபம் தரும் ஒப்பந்தங்களை இழந்தது இன்ஃபோசிஸ். இதனால் டாலர் வருவாய், அன்னிய நாட்டு வர்த்தகம், வருவாய் அகியவற்றில் பாதிப்பு அடைந்தது.

பீபிஒ

பீபிஒ

இந்நிறுவனத்தின் மென்பொருள் துறையின் வருவாய் குறைந்ததை அடுத்து இந்நிறுவனம் தனது பீபிஒ துறையை அதிக ஈடுப்பாட்டுடன் வளர்க்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மொத்த வருவாயில் 15 சதவீதம் வருவாய் அளிக்கும் பீபிஒ துறையை 85 சதவீதம் வருவாய் துறையாக மாற்ற நாராயணமூர்த்தி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய டெக்னாலஜி
 

புதிய டெக்னாலஜி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தளத்திற்கு ஏற்ற மென்பொருளை தயாரிப்பு பிரிவை (products, platforms and solutions (PPS) business) தனது கிளை நிறுவனமான எட்ஜ்வேர்வ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றி அதனை சிறப்பான முறையில் மெருகேற்றவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் இத்துறையில் அடுத்த 4 முதல் 5 வருடத்திற்கு மிதமான வளர்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்க முடியும்.

உயர் அதிகாரிகளின் ராஜினாமா

உயர் அதிகாரிகளின் ராஜினாமா

ஐடி துறையில் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுதல் என்பது மிகவும் சாதராணம் விஷயம். கடைநிலை ஊழியர் விலகினால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது, அதுவே உயர் அதிகாரிகள் விலகினால் பதிப்பு மிகவும் அதிகம். அந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து கடந்த 2 இரண்டு வருடத்தில் 20த்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரகளுக்கும் நிகரான பணியாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

விசா முறைகேடு

விசா முறைகேடு

இந்நிறுவனத்தின் ஊழியர்கள் பிற நாடுகளுக்கு சென்று பணியாற்றுவது வழக்கும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியதில் விசா முறைகேட்டை நடத்தியுள்ளது. இதை அமெரிக்க அரசு கண்டித்து 34 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இதற்கு எதிராக இந்நிறுவனம் நிதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து வருகிறது. இதனால் இந்த வழக்கு முடியும் வரை இந்நிறுவன ஊழியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலைபார்ப்பது கடினமாகியுள்ளது.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல், விப்ரோ மற்றும் சிடிஎஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால் மற்ற நிறுவனங்களின் பங்கு உயர்ந்தது, எதிர்மறையாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிய துவங்கியது.

சீஇஒ

சீஇஒ

இத்தனை பிரச்சனைக்கும் மேல் இந்நிறுவனத்தின் சீஇஓவான ஷிபுலால் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது பதவியில் இருந்து விலகுகிறார். இவரது பணியிடத்திற்காக பலரும் போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

முக்கியமான காரணம்

முக்கியமான காரணம்

இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் தங்களின் கொள்கையில் மாறாமல் ஸ்திரமாக உள்ளனர். இத்தகைய கொள்கை இன்றைய நடைமுறையில் சரியானதாக இருக்காது என பல ஐடி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் தான் ஊழியர்கள் வெளியேறுகின்றனரா??

 ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்நிறுவனம் மிகவும் குறைந்த அளவான ஊதிய உயர்வை மட்டுமே அளிக்கிறது. இக்குறைபாட்டு கடந்த 10 வருடங்களாக தொடர்கிறது. மேலும் பிற இந்தியா ஐடி நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் ஊதிய உயர்வு கொள்கை மிகவும் மோசமானதாகமே உள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

தற்போதிய நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 74 புள்ளிகள் உயர்ந்து 3,251.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு இருப்பை குறைத்துக்கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு நிதியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys stock rating: Narayana Murthy-led firm's stock could derate

We believe the next wave of growth for large Indian IT vendors will be led by infrastructure services and business process outsourcing (BPO). 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X