ரூ.331 கோடி கருப்பு பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல், ஆணையம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் நடத்திய வாகனம் மற்றும் இதர சோதனைகளில் கணக்கில் வராத சுமார் 331 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தவிர 225 லட்சம் லிட்டர் மதுபானங்களும், 1.85 இலட்சம் கிலோ போதைப் பொருள்களும் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதைப்பற்றி முழு விவரங்களை இப்போது பார்போம்.

பணப் பறிமுதல்

பணப் பறிமுதல்

வாகனம், தேர்தல் தொகுதிகள் மற்றும் இதர இடங்களில் செய்த சோதனையில் 153 கோடி பணப் பறிமுதலில் செய்யப்பட்டு ஆந்திரா முதலிடத்தையும், 28 கோடியுடன் கர்நாடகா இரண்டாவது இடத்தையும், அவற்றைப் பின்தொடர்ந்து மஹாராஷ்டிரா (25.67 கோடி), பஞ்சாப் (12.99 கோடி), தமிழ்நாடு (25.05) மற்றும் உத்திரப்பிரதேசம் (24.07 கோடி) ஆகிய மாநிலங்கள் பிற இடங்களையும் பிடித்தன.

சரக்கு

சரக்கு

நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்லாமல் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தல் ஆக இருந்தாலும் சரி மதுபானங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. மதுபானங்கள் பறிமுதல் பட்டியலில் மீண்டும் ஆந்திராவில் 1.44 லட்சம் லிட்டர்களும், பஞ்சாபில் 11.50 லட்சம் லிட்டர்களும், குஜராத்தில் 11.32 லட்சம் லிட்டர்களும், மேற்கு வங்கத்தில் 8.25 லட்சம் லிட்டர்களும் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் 7.25 லட்சத்து லிட்டர்களும் பிடிபட்டன.

போதைப்பொருள்

போதைப்பொருள்

போதைப்பொருள் பறிமுதலில் பஞ்சாப் 1.39 லட்சம் கிலோ என்ற அளவுடன் முதலிடத்தையும், உத்திரப்பிரதேசம் 24,000 கிலோவுடனும் ராஜஸ்தான் 10,000 கிலோவுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

வழக்குகள்

வழக்குகள்

இதுவரை இந்தியாவில் தேர்தல் ஆணைத்தின் சோதனையின் மூலம் மொத்தமாக 13,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 20,349 பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் தேர்தலின் போது பணியில் ஈடுபட்டனர். இவை அனைத்தும் கணக்கில் காட்டப்பட்டவை மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 331 cr cash seized so far during elections: EC

Total cash seized during the general elections 2014 till today amount to Rs 331 crore, according to an Election Commission release.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X