73% இந்திய குழந்தைகளின் சேட்டையில் பேஸ்புக்!! குழந்தைகளை ஊக்குவிக்கும் பெற்றோர்கள்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் செல்போன், லேப்டாப், கார், பைக் போன்று பேஸ்புக்கும் ஒரு அங்கமாக மாறி வருகிறது. மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய், விளம்பர வருவாய், நிறுவன வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாத காட்டாறு போல் செல்கிறது. இன்று பேஸ்புக்கின் இந்திய வாடிக்கையாளர்களை பற்றி ஒரு சூப்பாரன தகவல் கிடைத்துள்ளது வாங்க பார்போம்.

 

இந்தியாவில் இருக்கும் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களில் 73 சதவீதம் பேருக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ளதாம். இந்தியாவில் இப்போதுதான் 10 வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் வங்கி கணக்கை திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உலகம் உண்மையிலே படு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இது சாட்சி

பெற்றோர்களின் பங்கு

பெற்றோர்களின் பங்கு

இச்சிறுவர்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பது அவர்களது பெற்றோர்களில் 75 சதவீதம் பேருக்கு தெரியுமாம், மேலும் 82 சதவீதம் பெற்றோர்கள் இக்கணக்கை திறக்க உதவி செய்துள்ளதாக அசோச்சாமின் சர்வை குறிப்பு சொல்கிறது.

தவறான பாதை

தவறான பாதை

இச்சிறுவர்கள் இத்தகைய வயதிலே இது போன்ற சமுக வலைதளங்கள் பயன்படுத்துவதால் அவர்களை தவறான பாதைக்கு கூட்டிச் செல்வதாக சிலரும், ஒரு சிலர் சிறு வயதிலே இத்தகைய டெக்னாலஜியை கற்றுக் கொள்வதால் அவர்களின் படிப்பிற்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். ( மறக்காமல் கடைசி ஸ்லைடரை பார்க்கவும்.... ஹாப்பி பர்த்டே ஜூக்கர்பெர்க்)

மற்ற வலைதளங்கள்

மற்ற வலைதளங்கள்

இதில் பேஸ்புக் மற்றும் இல்லை ட்விட்டர், ஃபிளிக்கர், ஆர்குட், கூகிள் பிளாஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் இவர்கள் அக்கவுண்டை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குற்றம்
 

குற்றம்

சமூக வலைதளங்களில் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சேர்வது சட்டப்படி குற்றம், மேலும் அதற்கு அனுமதியும் இல்லை, இதனால் குழந்தைகள் போலியான தகவல்களை கொண்டு கணக்கை தொடர்கின்றனர்.

ஹாப்பி பர்த்டே ஜூக்கர்பெர்க்

ஹாப்பி பர்த்டே ஜூக்கர்பெர்க்

இன்று பேஸ்புக் நிறுவனத்தின் நிர்வனரான மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களுக்கு பிறந்த நாள். குட்ரிட்டனஸ் வலைதளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kids hooked to Facebook, parents on tenterhooks: Assocham

More than 41% of minors (between the ages of 8 and 12) have faked their age to make Facebook accounts, another shocker was that 80% of parents created FB accounts for their kids.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X