இந்தியாவின் காஸ்ட்லியான மக்களவைத் தேர்தல் இது தான்!! ரூ.30,000 கோடி செலவு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்நியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல்தான் இந்தியா சந்தித்துள்ள மிகவும் காஸ்ட்லியான தேர்தலாகும். இந்தத் தேர்தலுக்கான செலவு ரூ.3,426 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் செலவைவிட 131% அதிகம்.

 

இந்த ஒன்பது கட்டத் தேர்தலில் தேர்தல் கமிஷனின் (அதாவது மத்திய அரசின்) செலவு மட்டுமே ரூ.3,426 கோடி என்றும், இத்துடன் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சேர்த்து செய்யும் ஒட்டுமொத்த செலவுத் தொகை ரூ.30,000 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே குறிக்கோள்

ஒரே குறிக்கோள்

எப்படியாவது இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவை அதிகமாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே தேர்தல் செலவும் குண்டக்க மண்டக்க எகிறியுள்ளது.

இலக்கை எட்டியது

இலக்கை எட்டியது

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு 66.38 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுயேட்சை வேட்பாளர்கள்

சுயேட்சை வேட்பாளர்கள்

மேலும், ஏகப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் குதித்துள்ளதால், செலவுகளும் தானாகவே உயர்ந்துள்ளன. வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ஓட்டு சிலிப்புகள் விநியோகம் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் செலவுகளை அதிகரித்துவிட்டன.

வரலாறு ஒரு முக்கியம் அமைச்சரே..
 

வரலாறு ஒரு முக்கியம் அமைச்சரே..

1952ல் நடந்த இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் செலவைவிட 20 மடங்கு 2009 தேர்தலில் செலவாகியிருந்தது. தேர்தல் செலவுகள் 1952ல் ரூ.10.45 கோடி (ஒரு வாக்காளருக்கு 60 பைசா), 2004ல் ரூ.1,114 கோடி (ஒரு வாக்காளருக்கு ரூ.17), மற்றும் 2009ல் ரூ.1,483 (ஒரு வாக்காளருக்கு ரூ.12) ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's costliest ever Lok Sabha elections: Govt spent 131% more than in 2009

This was the most expensive Lok Sabha elections entailing a cost of Rs 3426 crore to the national exchequer, a substantial jump of 131 per cent over the expenses incurred in 2009.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X