ரூ.5000 கோடி மதிப்புடைய துறைமுகத்தை கைபற்றிய குஜராத் நிறுவனம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத்: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) நிறுவனம் ஒரிசாவின் தர்மா துறைமுகத்தை 5,000 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இது இந்திய துறைமுக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஒப்பந்தம் என்பது குறிப்பிடதக்கது.

 

டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவானது இந்த தார்மா துறைமுகம். இப்போது இத்துறைமுகத்தை குஜராத்தின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் 5,000 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது.

 ஆதானி குழுமம்

ஆதானி குழுமம்

இந்நிறுவனம் குஜராத்தை தலைமையிடமாக கொண்டு, சரக்கு போக்குவரத்து, பவர், விலசாயம், துறைமுகம், என பல துறைகளில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் நிறுவவரான் கெளதம் அதானி, பாரத ஜனதா கட்சியின் பிரதமார் வேட்பாளாரான நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர் என்பது குறிப்பிடதக்கது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

அதானி போர்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கும் இடையே துறைமுக கையகப்படுத்துதலுக்காக இன்று ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பற்றி செய்திகள் எதுவும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

தர்மா துறைமுகம்

தர்மா துறைமுகம்

தர்மா போர்ட் நிறுவனம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் சரி பாதி முதலீட்டுடன் துவங்கப்பட்டது.

முதலீடு மற்றும் சரக்கு போக்குவரத்து
 

முதலீடு மற்றும் சரக்கு போக்குவரத்து

இந்த துறைமுகத்தை உருவாக்க இரு நிறுவனங்களும் 3200 கோடி முதலீடு செய்து துவங்கியது. மேலும் இத்துறைமுகம் சுமார் 25 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. இத்துறை முகத்தில் அதிகளவு தாதுப் பொருட்களே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Ports buys Dharma port for about Rs5,000 crore

Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ), India’s biggest private port operator, has bought the Dhamra port in Odisha for about Rs.5,000 crore from a joint venture (JV) of Tata Steel Ltd (Tata Steel) and Larsen and Toubro Ltd (L&T) in the biggest deal yet in the Indian ports sector.
Story first published: Friday, May 16, 2014, 17:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X