புதிய சிஇஓ-வின் சம்பளம் ரூ.120 கோடியாம்!! இன்போசிஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி அனல் பறக்கும் செய்தி தினமும் எதாவது ஒன்று வந்து விடுகிறது. இன்றைய செய்தி என்னவென்றால் புதிய சிஇஓ-வின் சம்பளத்தை பற்றியது. இதுவரை இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ அவர்களின் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை முக்கியமாக பார்க்கப்பட்டதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

  ஆனால் தற்போது இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாள் முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவர்கள் அனைவருமே நிறுவனத்தின் நிறுவனர்கள் ஆவர். இதனால் இவர்களின் சம்பளம் பெரிதாக இருக்காது. தற்போது நியமிக்கப்படும் சிஇஓ நிறுவனர்கள் அல்லாத ஒருவர் என்பதால் இவரின் சம்பளம் குறித்து பெரிதாக எதிர்ப்பாகப்படுகிறது.

  சந்தை நிலவரம்

  இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வை தேர்ந்தெடுக்கும் பொருப்பில் இருக்கு ஒருவர் சம்பளத்தை பற்றி கூறுகையில் "இந்தியாவின் டாப் சாப்ட்வேர் நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளத்தை விட சிறப்பாகவே வழங்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது."

  தோராயக் கணக்கு

  10 முதல் 20 மில்லியன் டாலர் என்பது தவிர்க்க முடியாத ஒரு சம்பளம் அதாவது ரூ.60 கோடி முதல் ரூ.120 கோடி, மேலும் தேர்ந்தெடுக்கும் ஆட்களின் திறமையை பொருத்து 1 முதல் 2 மில்லியன் டாலர் வரை சம்பளம் மாறுபடலாம் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

  இவ்வளவு பெரிய தொகை!!

  மேலும் அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர், "நிறுவனத்திடம் மில்லியன் கணக்கில் பணம் இருக்கும் பட்சத்தில், இத்தகைய சம்பளம் தருவது நிறுவனத்திற்கு பெரிய கஷ்டம் எதும் இல்லை என்றே தெரிவித்தார். " (அப்ப நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் ஏன் ஊதிய உயர்வை குறைந்த அளவே தருகிறார்கள்?? )

  இதர நிறுவனங்கள்

  இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவிற்கு ரூ.60 கோடி முதல் ரூ.120 கோடி சம்பளம் சரி.. இதர நிறுவனங்களின் சிஇஓக்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை ஒரு ரவுன்டு பார்போம்.

  இன்போசிஸ்

  இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதிய சிஇஓ-வான ஷிபுலால் இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவரின் சம்பளம் வருடத்திற்கு ரூ.16 இலட்சம் மற்றும் 2,469,711 பங்குகள்.

  விப்ரோ

  விப்ரோ நிறுவனத்தின் சிஇஓவான டி.கே. குரியன் அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6.1 கோடி சம்பளம். (கணக்கில் காட்டப்படுபவை)

  டிசிஎஸ்

  டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவான என். சந்திரசேகரன் அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1.8 கோடி மற்றும் 88,528 பங்குள்

  சிடிஎஸ்

  சிடிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவான பிரான்சிஸ்கோ டிசோசா அவர்களின் வருடாந்திர சம்பளம் 590,000 டாலர், 844,812 டாலர் டார்கெட் போனஸ் மற்றும் 9.6மில்லியன் மதிப்புள்ள பங்குகள்.

  இன்போசிஸ் வருவாய்

  இந்தியாவில் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2013-14ஆம் நிதியாண்டில் 8.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிறுவன கருவூலத்தில் தற்போது 30,000 கோடி உள்ளது.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Infosys to match salary of the new CEO with rival IT companies like TCS, Wipro, Cognizant

  CEO pay has never been a topic of discussion at Infosys during its 33-year history because the job has always gone to founders whose shareholding in the firm compensated for their relatively low salary compared with industry peers.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more