தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!! மே 23ஆம் தேதி வங்கி செயல்பாடு முடக்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியவின் பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து வங்கி பணியாளர்கள் வருகிற மே 23ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளனர் இதனால் வெள்ளிக்கிழமை வங்கி செயல்பாடு முற்றிலும் முடங்க உள்ளது.

 

ஆக்சிஸ் வங்கியின் தலைவரான பி.ஜே.நாயக் தலைமை வகிக்கும் ரிசர்வ் வங்கியின் ஒரு குழுவின் பரிந்துரையின்படி, அரசு, பொது துறை வங்கிளில் வைத்திருக்கும் பங்கு இருப்பை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கும்படி கடந்த வாரம் மத்திய அரசிற்கு ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இம்முடிவை எதிர்த்து இந்தியாவின் 5 வங்கி கூட்டமைப்புக்களில் இருக்கும் 10 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் பணியாளர்கள் மே 23ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

பரிந்துறையின் விளைவு

பரிந்துறையின் விளைவு

பி.ஜே.நாயக் அவர்களின் பரிந்துரை இந்திய பொது துறை வங்கிகளின் பிம்பத்தை முற்றிலும் மாற்றி அமைத்து விடும் என மகாராஷ்டிர ஸ்டேட் பாங்க் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் விஷ்வாஷ் உத்தகி தெரிவித்தார்.

எதிர்ப்பிற்கு என்ன காரணம்??

எதிர்ப்பிற்கு என்ன காரணம்??

பொது துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் இவர்களின் வேலைக்கான உத்திரவாதம் குறைந்து விடும், எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஐடி துறையை போல் மாறிவிடும். மேலும் இவர்களுக்கு வேலை பளு கண்டிப்பாக அதிகரிக்கும், இதனால் இவர்களின் சுகவாசியான வாழ்க்கை பரிபோகும்.

மக்களுக்கும் என்ன பாதிப்பு
 

மக்களுக்கும் என்ன பாதிப்பு

பொது வங்கிகள் (அரசு வங்கிகள்) என்ற காரணத்தினால் நாம் நம் பணத்தை எந்தவித சலனமும் இன்றி வங்கிகளில் முதலீடு செய்து வருகிறோம், தனியார்மையமாக்கப்பட்டால் இத்தகைய வங்கிளின் பாதுகாப்பு கண்டிப்பாக குறையும். மேலும் வங்கி சேவை கட்டணங்கள் தனியார் வங்கிகளை விட தற்போது குறைவாக உள்ள, இந்த பரிந்துறை ஒப்புதல் பெற்றால் இக்கட்டணங்களும் உயரும்.

கூட்டமைப்புகள்

கூட்டமைப்புகள்

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 கூட்டமைப்புகள், அனைத்து இந்தியா வங்கி கழகம் (AIBEA), அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கழகம் (AIBOA), வங்கி ஊழியர்களின் இந்திய கூட்டமைப்பு (BEFI), இந்தியன் நேஷ்னல் பாங்க் எம்பிலாயிஸ் பெடரேஷன் (INBEF), இந்தியன் நேஷ்னல் பாங்க் ஆபிசர்ஸ் காங்கிரஸ் (INBOC) ஆகிய கூட்டமைப்புகள் இணைந்து மே23ஆம் தேதி போராட்டத்தில் இறங்க உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Unions to strike on May 23 against Nayak report

Giving a strike call on May 23 against recommendations of the P J Nayak Committee on corporate governance in public sector banks, various bank employees’ associations said today they would oppose any attempt to privatise state-run banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X