ஆடை விற்பனையில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பிலிப்கார்டின் மன்திரா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இப்போது ஆன்லைன் சில்லறை வர்த்தக சந்தையில் விற்பனையை விட போட்டி அதிகமாகியுள்ளது, இந்நிலையில் இப்போட்டியை புத்திசாலிதனமாக எதிர்கொள்ள பிலிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மிந்த்ரா.காம் நிறுவனத்தை கைபற்றியுள்ளது.

 

இந்த கையகபடுத்துதலில் மிந்த்ரா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் பிலிப்கார்ட் நிறுவனம் கைபற்றியுள்ளது. ஆனால் இதன் மதிப்பை இரு தரப்பும் வெளியிட மறுத்துவிட்டது.

ரூ.2,000 கோடி

ரூ.2,000 கோடி

இந்த ஒப்பந்தத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர் இந்த கையகபடுத்துதல் மதிப்பு ரூ.1,800 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என தெரிவித்தார். இந்நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் பேஷன் உலகில் தனது கால்தடத்தை ஆழமாக பதிக்க பிலிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

அமேசான்

அமேசான்

உலக சில்லரை வர்த்தகத்தில் அதிக்கம் செலுத்தி வரும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கிய முதல் இந்திய நிறுவனங்களுக்கும் தலைவலி துவங்கியது. இதனால் இந்திய நிறுவனங்கள் அமேசான் நிறுவனத்திற்கு கடும் போட்டியை கொடுக்க பல திட்டங்களை தீட்டுகின்றன. பிலிப்கார்டின் இந்த நிறுவனத்தை கைபற்றியது இதன் எதிரொலிதான்.

ஆடை விற்பனையில் அமேசான்
 

ஆடை விற்பனையில் அமேசான்

அமேசான் நிறுவனம் லாஸ் வேகாஸின் பேஷன் நிறுவனமான Zappos.com நிறுவனத்தை கைபற்றி ஆடை விற்பனையில் இறங்கியது. இந்தியாவில் அமேசானின் ஆடை விற்பனைக்கு போட்டி கொடுக்கும் வகையில் பிலிப்கார்ட் மைன்திரா நிறுவனத்தை கைபற்றியுள்ளது.

பிலிப்கார்டின் நிலை

பிலிப்கார்டின் நிலை

பிலிப்கார்ட் நிறுவனம் ஆடை விற்பனையில் இதுவரை பெரிய அளவில் வெற்றி ஏதும் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மிந்த்ரா நிறுவனத்தை கைபற்றியதை தொடர்ந்து, அடுத்த ஆறு மாதங்களில் இந்நிறுவனத்தின் ஆடை விற்பனை நிலவரத்தை சரியாக கணித்துவிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart buys fashion e-retailer Myntra

In what could be seen as an early phase of consolidation in the ₹62,000-crore e-commerce market, India’s largest online retailer, Flipkart.com, has acquired fashion e-retailer Myntra.com.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X