மொபைல் கட்டணங்கள் உயர்த்துவது நிச்சயம்!! ஏர்டெல், வோடாபோன் அதிரடி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொலைதொடர்பு சேவை அளிக்கும் ஏர்டெல், வோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் உட்செலவுகள் அதிகரித்தால் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், தற்போது சில நிறுவனங்கள் அளிக்கும் மலிவான கட்டண சேவைகள் கூட இனி கிடைக்காது.

தொலைதொடர்பு நிறுவனங்களின் உட்செலவுகள் ஒவ்வொரு வருடத்திற்கு அதிகரித்த வண்ணமே உள்ளது, இதனால் நிறுவனங்களின் லாப விகதங்களில் பெரும் பங்கு இத்தகைய செலவுகளுக்கே செலவு செய்யப்படுகிறது என வோடாபோன் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

உட்செலவுகள்

உட்செலவுகள்

குறிப்பாக கடந்த வருடம் சேவை கட்டணம் 6.2 சதவீதம் அதிகரித்து, இதற்கு முக்கிய காரணம் இந்த உட்செலவுகள், மேலும் கடந்த 17 ஆண்டுகளாக கட்டணங்கள் குறைவாகவே உள்ளது. எனவும் வோடாபோன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்டென் பீட்டர்ஸ் செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லாபம்

லாபம்

தொலைதொடர்பு நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க, கட்டணத்தை உயர்த்துவதை மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால் நிறுவனங்கல் அளிக்கும் தள்ளுபடி சலுகை மற்றும் இலவச திட்டங்களை குறைத்து கொண்டாலே அதிகப்படியான லாபத்தை பார்க்க முடியும்.

ஏர்டெல்
 

ஏர்டெல்

சில நாட்களுக்கு முன்பே பார்தி ஏர்டெல் நிறுவனம் லாப விகிதங்களை அதிகரிக்க தனது தள்ளுபடி சலுகை மற்றும் இலவச திட்டங்களை குறைத்து வருவதாக அறிவித்தது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

ஸ்பெக்ட்ரம் ஏலம்

மேலும் சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மத்திய அரசு மிகவும் குறைவான விலை நிலையை அறிவித்தாலும், அதை உரிய முறையில் ஏலத்தில் கைபற்ற நிறுவனங்களிடம் போதிய நிதி இல்லை என்பது மிகவும் வருந்ததக்க விஷயம் என மார்டென் பீட்டர்ஸ் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mobile tariffs set to go up

Days of low mobile tariffs might be over as mobile operators are contemplating hike in prices. After Bharti Airtel, Vodafone India has said tariffs would go up every year in view of growing input costs.
Story first published: Wednesday, May 21, 2014, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X