அன்னிய முதலீடு 2 மடங்கு உயர்வு!! இதற்கும் மோடி தான் காரணம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்று ராஷ்ட்ரபதி பவனில் பதவியேற்கும் தருவாயில் இந்திய பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு சிறப்பான செய்தி கிடைத்துள்ளது. இந்தியா சந்தையில் செய்யப்பட்ட அன்னிய முதலீடு இவ்வருடம் சமார் இரண்டு மடங்கு உயர்ந்து 60 பில்லியன் டாலர் அளவாக அதிகரித்துள்ளதாக அசோச்சாம் அமைப்பு தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியாவில் ஏற்படும் ஆட்சிமாற்றத்தை கணித்த வெளிநாடுகளும், இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த தேர்தல் சிறந்த தருணமாக உணர்ந்த சில ஆசாமிகளும் இந்திய சந்தையில் பணத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

60 பில்லியன் டாலர்

60 பில்லியன் டாலர்

இத்தகைய அன்னிய முதலீடு, பாஜக கட்சி நரேந்திர மோடியை பரதமர் வேட்பாளராக அறிவித்தப் பின்னரே இந்திய சந்தையில் முதலீடு அதிகரிக்க துவங்கியது. மேலும் அன்னிய நேரடி முதலீடு மற்றும் அன்னிய நிறுவன முதலீடு ஆகியவை இணைந்து கடந்த நிதியாண்டில் வெறும் 29 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருந்தது, ஆனால் 2014ஆம் நிதியாண்டில் சமார் 60 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருப்பது குறிப்பிடதக்கது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

மேலும் இந்திய சந்தையில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குவது குறைவான விலையும், குறைவான வட்டியும் தான் என அசோசாம் அமைப்பின் தலைவர் ரானா கபூர் தெரிவித்தார்.

டாலர்- ரூபாய்
 

டாலர்- ரூபாய்

மேலும் அன்னிய முதலீடு அதிகரித்ததின் காரணமாக சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு தற்போது டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 58.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

மேலும் ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் நடப்பு கணக்கு அதிகரிப்பு ஆகியவற்றின் சூழ்நிலையில் இந்திய சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை ரிசர்வ் வங்கி கவணித்து சிறப்பான செயல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும் அசோசாம் தெரிவித்தது.

தங்க இறக்குமதி

தங்க இறக்குமதி

ரூபாய் மதிப்பு மேலும் அதிகரித்தால், ஏற்றமதியில் பல பிரச்சனைகளை சந்திக்க நேடிடும் இதனை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளவை அறிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Real Modi mania is yet to set in: Foreign investment seen doubling to $60 bn

Foreign investment inflows are estimated to more than double to $60 billion this fiscal riding on the high expectations from the incoming Narendra Modi-led government, the Associated Chambers of Commerce and Industry (Assocham) said Sunday.
Story first published: Monday, May 26, 2014, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X