எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்திற்கு மாறிய இன்போசிஸ் உயர் அதிகாரி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவரான சந்திரசேகர் காகல் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகி நடுநிலை ஐடி சேவை நிறுவனமான எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக சேர்ந்தார்.

 

எல்&டி இன்போடெக் நிறுவனம், 14 பில்லியன் டாலர் மதிப்புடைய லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும்.

9வது உயர் அதிகாரி

9வது உயர் அதிகாரி

காகல் இன்போசிஸ் நிறுவனத்தின் வெளியேறிய முக்கிய உயர் அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும் இவர் இந்நிறுவனத்தில் வெளியேறிய 9வது உயர் அதிகாரி, அவரது பணிக்காலம் 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் முடிந்தது. மேலும் அவர் தற்போது எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

சந்திரசேகர் காகல் 1999ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின், இந்திய பிரிவின் அப்ளிக்கேஷன் டெவலப்மென்ட், டெஸ்டிங், இன்பராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்விசஸ் பரிவில் இயக்க அதிகாரியாக சேர்ந்தார். மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் பீபிஒ பிரிவின் நிர்வாக குழுவிலும் இருந்தார்.

முக்கிய அதிகாரிகள்
 

முக்கிய அதிகாரிகள்

நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 1.5 வருடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் வெளியேறினர். இதில் பாலகிருஷ்னன் மற்றும் அசோக் வெமூரி அகியோரும் அடக்கம்.

புதிய சீஇஓ

புதிய சீஇஓ

மேலும் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவாக இருக்கும் ஷிபுலால் வருகிற மார்ச் மாதம் முதல் நிறுவன பணிகளில் இருந்து வெளியேறுகிறார். அதனால் புதிய சீஇஓவை தேடும் பணியில் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் தீவரமாக தேடிவருகின்றனர்.

நாஸ்காம்

நாஸ்காம்

ஐடி துறைகளின் அமைப்பான நாஸ்காம் அமைப்பின் 2012-13ஆம் ஆண்டின் தகவல் படி இந்திய ஐடி துறையில் எல்&டி இன்போடெக் 8ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former Infosys SVP Chandrashekar Kakal joins L&T Infotech

Former Infosys senior vice president Chandrashekar Kakal has joined mid-sized IT services firm L&T Infotech as its chief operating officer (COO).
Story first published: Tuesday, May 27, 2014, 13:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X