பெரு மூச்சு விட்ட ரகுராம் ராஜன்!! வேலைக்கு ஆப்பு இல்லை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அருண் ஜேட்லி நிதியமைச்சராக பதவியேற்றி முதல் நாளான நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவரை சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் பற்றி நிதியமைச்சரிடம் பேசியதாக ரகுராம் ராஜன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

மேலும் ஆட்சி மாற்றத்தால் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மாற்றப்படுவார் என சில தகவல் வெளிவந்தது. இதைபற்றி எதற்கும் அஞ்சாத ரகுராம் ராஜன் தனது பணிகளை சிறப்பாக செய்து வந்தார். தற்போதிய நிலவரப்படி இவரது வேலைக்கு உலை முடிவை புதிய அரசு ஏற்கவில்லை. மேலும் இவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை.

இருவரின் சந்திப்பு

இருவரின் சந்திப்பு

மேலும் ரிசர்வ் வங்கி தற்போது செய்து வரும் பணவீக்கத்தை குறைக்கும் பணிகளை தொடர்ந்து செய்ய நிதியமைச்சர் ரகுராம் ராஜனிடம் அறிவுறுத்தினார். நிதியமைச்சர் அவர்கள் நேற்று பதவியேற்றிய பின்னர் இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் பணவீக்கத்தை குறைப்பதே முக்கிய பணி என குறிப்பிட்டார்.

பாஜக கருத்து

பாஜக கருத்து

சில மாதங்களுக்கு முன்பு ரகுராம் ராஜன் பணவீக்கத்தை குறைப்பதற்காக வட்டி வகிதங்களை அதிகரித்ததை கண்டித்து பாஜக கட்சியின் சில முக்கிய அதிகாரிகள் ராஜனை விமர்சித்தனர். மேலும் ஜனவரி 2016ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பணவீக்கம் 6 சதவீதமாக குறைப்பதை லட்சியமாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. அதற்காக 2013ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து 3 முறை வட்டி வகிதங்களை உயர்த்தியது குறிப்பிடதக்கது.

ரகுராம் ராஜன்
 

ரகுராம் ராஜன்

2013ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம், இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்றார். நிதியமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இவரது திட்டங்களின் மூலம் ரூபாய் மதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

புதிய அரசு - ரிசர்வ் வங்கி

புதிய அரசு - ரிசர்வ் வங்கி

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட உள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கம் கூடிய விரைவில் குறைய பல சாத்தியகூறுகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rajan Meets Jaitley, Says RBI Will Continue to Balance Growth, Inflation

Reserve Bank of India Governor Raghuram Rajan on Tuesday met Arun Jaitely hours after he took charge as the new finance minister. Dr Rajan said he discussed a range of issues with the finance minister.
Story first published: Wednesday, May 28, 2014, 10:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X