ஜெய்ப்பூர்: ஒவ்வொரு நிதியாண்டிலும் சமூக பொறுப்புணர்வு பணிகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி தனது லாபத்தில் 2 சதவீதத்தை செலவிடும் என்று திங்கள்கிழமையன்று ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தொவித்துள்ளார்.
முன்னதாக இந்த வங்கி தன்னுடைய லாபத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே இவ்வாறான சமூக பொறுப்புணர்வு (Corporate Social Responsibility) பணிகளுக்காக செலவிட்டு வந்தது குறிப்பிடதக்கது.
சமூக பணிகள்
'நடப்பு நிதியாண்டில் இருந்து சமூக பணிகளுக்காக 2 சதவீதத்தை செலவிட வேண்டுமென்பது எங்குளுடைய முயற்சியாகும்' என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (State Bank of Bikaner and Jaipur) வங்கி நடத்திய விழா ஒன்றில் அருந்ததி அவர்கள் குறிப்பிட்டார்.
பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ்
இந்த விழாவின் ஒரு பகுதியாக பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ், சோலார் தகடுகள் மற்றும் மீட்பு வாகனம் ஆகியவற்றை திரு.அருந்ததி பட்டார்சார்யா நிறுவன சமூக பொறுப்புணர்வு வழியாக வழங்கினார்.
பண உதவி
'சமூக பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். சமூக நல செயல்களை செய்வதற்காக தங்களுடைய மதிப்பு மிக்க நேரத்தை செலவிடும் நிறுவனங்களுக்கு நாங்கள் பண உதவிகளையும் செய்கிறோம்' என்றார் அவர்.
அக்சயா பாத்ரா
அக்சயா பத்ரா நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர் வழியாக ஒரு சோலர் பேனலை நன்கொடையாக வழங்கினார் அவர். இந்த சோலார் பேனல் வழியாக குழந்தைகளுக்கான உணவுகளை சமைத்திட முடியும்.
ரூ7.20 கோடி
2013-14-ம் நிதியாண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர் நிறுவனம் ரூ.7.20 கோடிகளை சமூக பொறுப்புணர்வு பணிகளுக்காக செலவிட்டுள்ளதாக ஒரு மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.
மாற்று வழி
இதற்கு பதிலாக இவர்கள் கல்வி கடன் மற்றும் மருத்துவ கடனுக்கான வட்டி வகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் முதல் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications