ஜவுளி ஏற்றுமதில் இந்தியா 2வது இடம்.. அப்ப முதல் இடம்??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜவுளி ஏற்றுமதியில் உலகிலேயே அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஐ.நா. கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

 

உலகம் முழுவதும் 772 பில்லியன் டாலர்களுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்தியா மட்டும் 40.2 பில்லியன் டாலர்களுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்கிறது.

ஜவுளி ஏற்றுமதியில் தன்னுடைய போட்டி நாடுகளான இத்தாலி, ஜெர்மனி மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னேறியுள்ளதாகவும், சீனா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜவுளி ஏற்றுமதில் இந்தியா 2வது இடம்.. அப்ப முதல் இடம்??

உலகப் பொருளாதார மந்தம் காரணமாகவும், பணவீக்கத்தின் தாக்கத்தினாலும் ஜவுளி ஏற்றுமதி சிறிது தள்ளாடினாலும், அப்பேரல் எனப்படும் ரெடிமேடு ஆடைகள் உள்ளிட்ட ஜவுளிகளின் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டதாலேயே இந்தியாவால் 2வது இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. மத்திய அரசின் சில பொருளாதாரக் கொள்கைகளும் இதற்குக் கை கொடுத்துள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டில் 12.9 பில்லியன் டாலர்களுக்கு அப்பேரல்களை ஏற்றுமதி செய்து 8வது இடத்தில் இருந்த இந்தியா, 2013ஆம் ஆண்டில் 15.7 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India world's second largest textiles exporter: UN Comtrade

India has improved its ranking to emerge as the second largest textile exporter in the world beating competitors like Italy, Germany and Bangladesh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X