பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 39000 கோடி உதவும் ரிசர்வ் வங்கி!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் ரூ.39,000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அரசுப் பத்திரங்களில் முடங்கிக்கிடக்கும் தொகையில் ஒரு பகுதியை மோடி அவர்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரிலீஸ் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு நிர்ணயித்துள்ள 8 சதவீத ரெப்போ ரேட் இதற்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

மத்திய அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதை உணர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னர் இத்தகைய அசாத்தியமான முடிவை எடுத்துள்ளார்.

பத்திர முதலீடு

பத்திர முதலீடு

இதையடுத்து அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் வங்கி டெபாசிட்டுகளுக்கு அரை சதவீதம் வட்டி குறைத்துள்ளது (SLR cut). இதனால் வங்கிகள் அதிக அளவில் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வழி கிடைத்துள்ளது.

வங்கி

வங்கி

இத்தகைய முதலீட்டு திட்டங்களினால் தனியார் மற்றும் அந்நிய வங்கிகள் அதிக பலன்களைப் பெறும் என்றும் தெரிகிறது.

குறைவான வட்டி

குறைவான வட்டி

அரசுப் பத்திரங்களில் ரூ.22.9 லட்சம் கோடிகளை வங்கிகள் முதலீடு செய்துள்ளன. மொத்த டெபாசிட்டான ரூ.78.9 லட்சம் கோடியில் இது 29 சதவீதமாகும். எஸ் எல் ஆர் குறைப்பு மூலம் அரசுப் பத்திரங்களை விற்று வங்கிகள் அதிக லாபம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan injects Rs 39,000cr into Modi growth plan

Reserve Bank of India governor Raghuram Rajan did his bit to support the Modi government's growth plans by releasing over Rs 39,000 crore of funds locked in government bonds.
Story first published: Saturday, June 14, 2014, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X