வெளியேறிய அதிகாரிகளை பற்றி கவலை இல்லை!! நாராயண மூர்த்தி அதிரடி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து எத்தனை உயர் அதிகாரிகள் வெளியே சென்றாலும் நிறுவன பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்த அதிகாரிகள் உள்ளனர் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

 

இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து வெளியேறிய நாராணயன மூர்த்தி கடந்த ஜூன் மாதம் நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்தார். இவரின் வருகையை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தின் 11 உயர் மற்றும் முக்கிய அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையாக பாதிப்பு அடைந்தது. மேலும் சில பங்குசந்தை முதலீட்டு நிறுவனங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைத்தது.

புதிய சீஇஓ

புதிய சீஇஓ

பல பிரச்சனைகள், குழப்பங்கள் மத்தியில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓவாக, எஸ்.ஏ.பி நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான விஷால் சிக்காவை நியமித்தது இன்போசிஸ்.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

சனிக்கிழமை நடத்த கூட்டத்துடன் இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து பொருப்புகளில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்தார், மேலும் இக்கூட்டத்தில் நாராயண மூர்த்தி பேசுகையில் "நிறுவனத்தில் இருந்து இனி எத்தனை உயர் அதிகாரிகள் வெளியேறினாலும் நிறுவனத்தை செவ்வன செயல்படும் அதிகாரிகள் உள்ளனர் என அவர் தெரிவித்தார்."

ரோஹன் மூர்த்தி

ரோஹன் மூர்த்தி

நாராயண மூர்த்தி கடந்த ஜூன் மாதம் நிறுவனத்திற்கு வரும்போது தனது மகன் ரோஹன் மூர்த்தி அவர்களை நிர்வாக உதவியாளர் பதவியை கொடுத்தார். இப்போது தந்தையுடன் தானும் விலகுவதாக அவர் அறிவித்தார். இவரது கடைசி வேலைநாள் இன்று (திங்கட்கிழமை).

ஊழியர்கள்
 

ஊழியர்கள்

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஒய்வு மற்றும் பணி விலகும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மார்ச மாத முடிவில் இதன் அளவீடு 2.4 சதவீதம் உயர்ந்து 18.7 சதவீதமாக உள்ளது. தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 160,000 என்பது குறிப்பிடதக்கது.

திறன் குறைந்த அதிகாரிகள்

திறன் குறைந்த அதிகாரிகள்

மேலும் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அதிகாரிகளில் பலர் திறனற்றவர்கள் என நிர்வாகம் மற்றும் வெளி ஆய்வு நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளதாகவும் மூர்த்தி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Even if there's more top-level exits, Infosys has enough leaders to run business: Murthy

Infosys has enough senior managers to run the business even if more executives leave India's second-largest IT services exporter, its founder said on Saturday, after a spate of staff exits triggered concerns about a leadership vacuum.
Story first published: Monday, June 16, 2014, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X