ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர் மட்ட குழுவில் நீதா அம்பானி இணைந்தார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதல்களுடன் இன்று சேர்ந்தார்.

 

இன்று காலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40வதசு ஆண்டு கூட்டம் நடந்தது. இதில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி இருவரும் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் முக்கேஷ் அம்பானியின் தயார் கோகிலா பென் மற்றும் ஆகாஷ் அம்பானி, அனந்த அம்பானியும் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் இக்குடும்பத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

நீதா அம்பானி

நீதா அம்பானி

இதற்கு முன் நீதா அம்பானி ரிலையன்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் கல்வி, கட்டுமானம், சில்லறை போன்ற துறைகளில் தனது சிறப்பான செயல்பாட்டை காண்பித்தார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இன்று நடந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் பேசுகையில் "நீதாவின் செயல்பாடு நிறுவனத்தை பல வகையில் லாபகரமாகவும், மதிப்புதக்கவையாகவும் இருந்துள்ளது. அதில் குறிப்பாக ஜாம் நகரில் அமைத்த டவுன்ஷிப், அடுத்த தலைமுறைக்கான அலுவலகங்கள், ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் செய்த மாற்றங்கள் என பல உள்ளது" என தெரிவித்தார்.

கல்வி மற்றும் மருத்துவம்

கல்வி மற்றும் மருத்துவம்

இவர் துருபாய் அம்பானி இண்டர்நேஷ்னல் ஸ்கூல் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறார். மருத்து துறையில் சில முக்கிய நிறுவனங்களுக்கு உதவி செய்துள்ளார்.

 ஐபிஎல்
 

ஐபிஎல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சார்பில் நீதா அம்பானி அவர்களின் தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டில் கலந்து கொண்டது. மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் நிறுவனத்தை கடந்த 7 வருடமாக தலைமை வகித்து வருகிறார்.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தனது பட்ட படிப்பை வெளிநாடுகளில் முடித்து விட்டு தந்தையை போலவே நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது இவர் ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் நிறுவனத்தில் உயர் மட்ட குழுவில் உதவியாளராக பணியாற்றுகிறார்.

இஷா அம்பானி

இஷா அம்பானி

இவரது ஒரே மகளான இஷா அம்பானி தனது படிப்பை முடித்துவிட்டு நிறுவன பொறுப்புகளை ஏற்க்கும் முன் சில முக்கிய பயிற்சிக்காக அமெரிக்காவின் மெக்கன்சி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். பயிற்சிகள் முடிந்த உடன் நேரடியாக உயர் மட்ட நிர்வாக குழுவில் சேர உள்ளார் இஷா.

அனந்த அம்பானி

அனந்த அம்பானி

அவர் முகேஷ் அம்பானியின் கடைசி மகன். இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். படிப்பை முடித்து விட்டு நிறுவனத்தில் சேர்வதாக இப்போதே அறிவித்து விட்டார் அனந்த.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nita Ambani joins RIL board

Shareholders of Reliance Industries Ltd approved the appointment of Nita M Ambani, Chairperson of Reliance Foundation, as Director on the board of Reliance Industries at the annual general meeting held in Mumbai on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X