ஈராக் பிரச்சனைகளை கண்டு அஞ்சத் தேவையில்லை!! ரகுராம் ராஜன்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தை மட்டும் அல்லாமல் உலக சந்தைகளும் கடந்த சில நாட்களாக மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈராக்கில் நடக்கும் பிரச்சனைகள் தான். இதனால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க துவங்கியது. இதனால் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்த தயராக உள்ளது.

 

செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் ஈராக் பிரச்சனையை மிகவும் கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதனால் இந்திய சந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை எப்படி எதிர்ப்பது என கணித்து வருவதாகவும் அவர்தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

மேலும் இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ள காரணத்தினால் ஈராக் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஒரு வருட முன்பு உள்ள நிலையில் தற்போது இந்திய பொருளாதாரம் இருந்திருந்தால் நிச்சயமாக பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

அன்னிய செலவானி

அன்னிய செலவானி

இதுமட்டும் அல்லாமல் அன்னிய செலவானி அதிகளவில் இருப்பதாலும், பணவீக்கும் கட்டுக்குள் இருப்பதாலும் வெளி சந்தைகள் பற்றி நாம் பெரிதும் கவலை பட தேவையில்லை என ராஜன் அன்னிய செலவானியின் பலத்தை குறிப்பிட்டு, நமது பொருளாதார பலத்தை தெரிவித்தார்.

 கச்சா எண்ணெய்
 

கச்சா எண்ணெய்

ஈராக் பிரச்சனையில், இந்தியா வெளிநாடுகளை அதிகம் நம்பி இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து நாம் அனைவரும் தெரிந்த ஒன்று, டாலர் இருப்பு அதிகளவில் உள்ளதால் இந்த இக்கட்டான நிலையை நம்மால் சமாளிக்க முடிகிறது. மேலும் அடுத்த ஒரு மாதகாலத்திற்கு இதே நிலை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக பாதிக்கும்.

மாற்று எரிபொருள்

மாற்று எரிபொருள்

இந்த கச்சா எண்ணெய் உபயோகத்தை குறைக்க மாற்றும் எரிபொருள் அல்லது எரிசக்தியை இந்தியா உருவாக்கும் வரை இத்தகைய பிரச்சனைகளை நாம் சமாளித்து தான் ஆக வேண்டும் வேறு வழிக்கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI keeps close watch on Iraq situation

The Reserve Bank of India (RBI) Governor, Raghuram Rajan, said here on Tuesday that the central bank was watching the Iraq situation very closely and domestic economic conditions were conducive to deal with any shocks in the external front.
Story first published: Wednesday, June 18, 2014, 13:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X