சென்னையில் பட்ஜெட் வீடுகளை "கூவி கூவி" விற்கும் மஹிந்திரா குழுமம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சென்னையில் மலிவு விலை வீடுகள் உருவாக்கம் மற்றும் விற்பனை துறையில் மஹிந்த்ரா குழுமம் நுழைய உள்ளது. இந்த திட்டம் இக்குழுமத்தின் புதிய நிறுவனத்தின் பெயரில், வரும் ஜுலை 2014-ல் மஹிந்த்ரா லைஃப் ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் (Mahindra Lifespace Developers Ltd) தொடங்கப்படும் என்கின்றனர்.

மஹிந்த்ரா குழுமத்தின் தலைவராக திரு.ஆனந்த் மஹிந்த்ராவும், லைஃப் ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு.அனிதா அர்ஜுன்தாஸும், இந்த புதிய திட்டத்தைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு விளக்கமளித்தார்கள்

பட்ஜெட் வீடுகள்

பட்ஜெட் வீடுகள்

பங்குதாரர்களின் விருப்பத்திற்கேற்றவாறும் மற்றும் அளவிடக்கூடிய வகையிலும், தனியார் நிறுவனங்களுக்கு ஏற்ற, சந்தைக்கு தேவையான சுவையான இடத்தைக் நாங்கள் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம் என்றார் ஆனந்த் மஹிந்த்ரா. நாங்கள் இதை சரியாகப் பெற்றால், எங்களை பலரும் பின்தொடரும் வகையில், உரிய வகையில் இதை செய்தவர்களாக நாங்கள் இருப்போம்.

குறைந்த இடம்.. அதிக வசதிகள்..

குறைந்த இடம்.. அதிக வசதிகள்..

இத்திட்டதின் ஒவ்வொரு வீட்டின் அளவும் 350 ச.அடி முதல் 650 ச.அடி வரையில் இருக்கும். அவற்றிற்கு 1BHK மற்றும் 2BHK ஆகியவை இருக்குமாறும் அமைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சம் வரையிலும் இருக்கும்.

மும்பை

மும்பை

எனினும், மும்பையில் நாங்கள் ஒரு அறை - சமையலறை வடிவத்தில் வழங்க உள்ளோம். நகரத்தைப் பொறுத்த அமைவிடம் மாறுபடும். போக்குவரத்து இணைப்புகள் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு திட்டங்களுமே இரயில் நிலையங்களிலிருந்து 4 கிமீ தொலைவுக்குள் உள்ளன.

சென்னை டூ மும்பை

சென்னை டூ மும்பை

10 முதல் 15 ஏக்கர்களுக்கான திட்ட வடிவங்களை நாங்கள் வரைந்து கொண்டுள்ளோம், அவற்றில் 1,200 முதல் 1,500 வீடுகளைக் கட்ட முடியும். சென்னையின் திட்டம் 13 ஏக்கர்களிலும் மற்றும் மும்பையின் திட்டம் 15 ஏக்கர்களிலும் இருக்கும்.

எங்களின் சேவை.. மக்களின் லாபம்..

எங்களின் சேவை.. மக்களின் லாபம்..

இந்த திட்டங்கள் இலாப நோக்கம் கொண்டதாக இல்லாவிட்டாலும், சிறிதளவு இலாபத்தை காட்டுமாறு இருக்கும். இது கவர்ச்சியாக இருந்தால் தான், மலிவு விலை வீடுகளில் உங்களால் ஒரு புரட்சியை கொண்டு வர முடியும்.

மஹிந்திரா

மஹிந்திரா

நாங்கள் திட்டமிட்டபடி இப்பணி செயல்படுத்தி முடித்தால் இது மிகவும் இலாபமான திட்டமாக இருக்கும். பழமையான ரியல் எஸ்டேட் நிறுவனங்களை விட இலாப அளவுகளை குறைவாகவே வைத்துள்ளோம், ஆனால் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் திரும்புவதை நாங்கள் எதிர்பார்ப்போம், நாங்கள் மிகவும் அதிகமாக முதலீடு செய்துள்ளோம்.

விளம்பரம்

விளம்பரம்

மேலும் மஹிந்திரா குழுமம் தனது புதிய நிறுவனத்தை பிரபலப்படுத்தவும், வீடுகளின் விற்பனையை அதிகரிக்கவும் விளம்பரங்களில் அதிகளவில் செலவிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்றைய நடைமுறையில் மக்கள் விளம்பரம் செய்தால் எதை வேண்டுமானாலும் வாங்கு நிலையில் உள்ளது இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We can be trailblazers in affordable housing, says Anand Mahindra

The Mahindra Group is making its debut in the affordable housing segment in Chennai. The project will come up in July 2014 under a new vertical, launched by group company Mahindra Lifespace Developers Ltd. (MLDL).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X