கேரளாவை பார்த்து மிரளும் ஃபிளிப்கார்ட், அமேசான்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம்: இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில் கேரள மாநிலத்தில் இதன் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் புதிய நிறுவனங்கள் இம்மாநிலத்திற்குள்ளே நிழைவதற்கும் அஞ்சி வருகிறது.

 

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கேரள அரசு தான். கேரள அரசு ஆன்லைன் மூலம் விற்பனைக்கு, இத்தகைய நிறுவனங்கள் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வருகிறது இதனால் ஆன்லைன் சில்லறை நிறுவனங்களில் பெரு நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே சேவை அளித்து வருகிறது.

வழக்குகள்

வழக்குகள்

நுகர்வோருக்கு ஆன்லைன் பொருட்களை சப்ளை செய்த ஒரு கூரியர் நிறுவனம் மீது, கேரள வணிக வரி துறை, வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு கேரளா என்றாலே, ‘அலர்ஜி' ஆகி விட்டது.

ஆன்லைன் மோகம்

ஆன்லைன் மோகம்

இன்றளவில் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும் ஆன்லைன் வாங்குவதில் அதிகப்படியான பணம் மிச்சப்படுத்த முடிகிறது. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை தாறுமாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

இன்றைய தலைமுறை நாகரிகத்தில் பல மடங்கு மாறினாலும் தள்ளுபடி, விலை குறைவு போன்ற வார்த்தைகளுக்கு மயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பொருட்களை ஆடர் செய்யதால் பொருள் வீடு தேடி வரும்.

வரவேற்பு
 

வரவேற்பு

கேரளாவில் ஆன்லைன் பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால், பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்கள் கூட, உள்ளூர் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

பிரச்சனை

பிரச்சனை

இந்நிலையில் கேரள அரசு உள்ளூர் விற்பனை வரி சட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி வதிப்பிற்கு உட்பட்டது என அறிவித்துள்ளது. இதனால் பல ஆன்லைன் நிறுவனங்கள், கேரளாவில் இருந்து ஆர்டர் பெறுவதை நிறுத்தி விட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No e-commerce deliveries to Kerala due to sales tax

E-commerce companies including bigger players such as Flipkart, Amazon and Snapdeal have stopped delivering products to Kerala, due to issues with the state’s sales tax department.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X