பிரதமர் மோடியை சந்திக்கும் பேஸ்புக் உயர் அதிகாரி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி:இந்தியாவின் ஆக்ரோஷமான சமூக ஊடக பொழுதுபோக்கு சந்தையின் வாய்ப்புகளை பெறும் நோக்கில், பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஷெரில் ஸான்ட்பெர்க் இந்தியாவிற்கு முதன்முறையாக வர திட்டமிட்டுள்ளார். இப்பயணத்தில் பிரமர் மோடியை சந்திக்க உள்ளது, இவரது பயனத்தில் இது மிகவும் முக்கிய பங்கு என்பது குறிப்பிடதக்கது.

உலக சமுக வலைதள துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான பேஸ்புக், இதில் ஆழமாக கலூன்ற முயற்சி செய்து வருகிறது.

ஷெரில் ஸான்ட்பெர்க்

ஷெரில் ஸான்ட்பெர்க்

ஜுன் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் ஸான்ட்பெர்க், ஹைதராபத்தில் உள்ள சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்களை சந்திக்கவும், அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் டெல்லியில் நடக்க இருக்கும் ஊடக வட்டமேஜை சந்திப்பிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

பேஸ்புக்

பேஸ்புக்

'அவர் இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளார், எனினும் இது குறித்த விபரங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை' என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

அமெரிக்காவிற்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது, இங்கு 100 மில்லியன் பயனாளிகள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

பிரதமர் சந்திப்பு
 

பிரதமர் சந்திப்பு

விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், வியாபார வளர்ச்சி மற்றும் பொது கொள்கை, வியாபார செயல்பாடுகள் ஆகியவற்றை கவனித்து வரும் ஸான்ட்பெர்க், சமூக வலைத்தளங்களின் முதன்மையான ஆதரவாளராகத் திகழும் பிரதமர் திரு.நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியும்.. சமுக வலைதளமும்..

மோடியும்.. சமுக வலைதளமும்..

திரு.நரேந்திர மோடி அவர்கள், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் தான் தன்னுடைய பெரும்பாலான தொடர்புகளையும் மற்றும் அரசு அதிகாரிகளையும் சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்திர நிறுவனங்கள்

சிறு மற்றும் நடுத்திர நிறுவனங்கள்

மேலும் இப்பயனத்தில் விளம்பரப் பிரிவு மற்றும் சிறு மற்றும் மத்திய நிறுவனங்கள் வழியாக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய வாய்ப்புகளை இந்த நிறுவனம் சுறுசுறுப்பாக தேடி வருகிறது. சுமார் 25 மில்லியன்களுக்கும் அதிகமான அளவில் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்கள் இதில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

வருமானம்

வருமானம்

கடந்த ஆண்டு 1.46 பில்லியன்களாக இருந்த பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.5 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் 2.27 பில்லியன் டாலர்களாகவும், அது கடந்த ஆண்டின் இதே காலண்டை விட 82 சதவீதம் அதிகமானதாகவும் உள்ளது. இதில் மொபைல் விளம்பரங்கள் 59 சதவீத பங்களிப்பைக் கொடுத்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook COO Sheryl Sandberg's first India visit

Aggressive on tapping the multi-billion dollar opportunity in the Indian SME market, Facebook Chief Operating Officer Sheryl Sandberg is scheduled to make her maiden trip to the country as the social networking giant deepens ties in its second-largest market.
Story first published: Friday, June 20, 2014, 17:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X