இன்போசிஸ் சிக்காவின் சூழ்ச்சி.. 'சாப் லேப்ஸ்' நிர்வாக இயக்குநர் ராஜினாமா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ:ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சாப் லேப்ஸ் நிறுவனத்தின் இந்தியா கிளையின் நிர்வாக இயக்குநர் அனிர்பன் டே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

சாப் நிறுவனத்திலிருந்து விலகிய விஷால் சிக்கா, பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதே சாப் நிறுவனத்திலிருந்து டே பதவி விலகியிருப்பது தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) உலகில் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

இன்போசிஸில் சேரத் திட்டம்?

இன்போசிஸில் சேரத் திட்டம்?

சொந்த விஷயங்களுக்காக டே ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்பட்ட போதிலும், அவர் இன்போசிஸில் சேருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டே-யை இழுக்கும் சிக்கா?

டே-யை இழுக்கும் சிக்கா?

டே-யுடன் ஏற்கனவே ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்திருப்பதால், சிக்கா அவரை இன்போசிஸுக்கு இழுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் டேயின் ராஜினாமா என்று பரவலாகக் கருதப்படுகிறது.

'சாப்'பில் 6 ஆண்டுகள்

'சாப்'பில் 6 ஆண்டுகள்

2008ல் சாப் நிறுவனத்தில் நுழைந்த டே, கடந்த 2013 ஜனவரியில்தான் சாப் லேப்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாப் ஆக்சன் அனாலிடிக்ஸ், சாப் கேம் அனாலிடிக்ஸ் உள்ளிட்ட பல ஹானா-பேஸ்டு பிளாட்பாரங்களை இவர்தான் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எம்.டி.
 

புதிய எம்.டி.

சாப் லேப்ஸ் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. "இருந்தாலும் எப்போதும் போல் புதிய சாப் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சிறந்து விளங்கும்" என்று டேயின் பொறுப்புகளை தற்காலிகமாகக் சாப் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான க்ளாஸ் நியூமேன் கவனித்து வருகிறார் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SAP Labs India MD quits, may join Infosys

SAP Labs India’s managing director Anirban Dey has left the company for personal reasons. His exit has set off immediate speculation that he may join Infosys, as the announcement comes less than a week after the appointment of SAP CTO Vishal Sikka as Infosys' new CEO. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X