கோகோ-கோலா தொழிற்சாலைக்கு "பூட்டு"!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்த கோகோ-கோலா நிறுவனத்தின் தொழிற்சாலையை நடத்துவதற்கான அனுமதியை, அம்மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

 

'யாரும் எதிர்பார்க்காத வகையில் உத்திரப் பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Uttar Pradesh Pollution Control Board), வாரணாயின் மேஹன்டிகாஞ்ச் பகுதியில் இருந்த இந்துஸ்தான் கோகோ-கோலா தொழிற்சாலைக்கான அனுமதியை திரும்பப் பெற்றுக் கொண்டது' என்று கோகோ-கோலா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உற்பத்தி தடை

உற்பத்தி தடை

இந்த ஆணையை எதிர்த்து, கோகோ-கோலா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை விசாரித்திருக்கும் தீர்ப்பாயம், 20-ம் தேதியன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளும்.

கோகோ-கோலா நிறுவனம்

கோகோ-கோலா நிறுவனம்

இந்த ஒற்றை-வரிசை தொழிற்சாலையில் கோகோ-கோலா நிறுவனத்தின் மென் பானங்கள் கிளாஸ் பாட்டில்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. இது இந்துஸ்தான் கோகோ-கோலா பீவரேஜஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பாட்டிலிங் செயல்பாட்டு தொழிற்சாலையாகும்.

நிலத்தடி நீர்

நிலத்தடி நீர்

ஜுன் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படி, கோகோ-கோலா மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் (Central Ground Water Authority) இருந்து அனுமதியை பெறவில்லை என்று உத்திரப் பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டிருந்தது. தண்ணீர் தேவை அதிகமாக உள்ள இடங்களில், நிலத்தடி நீரின் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தும் பணிகளை CGWA செய்து வருகிறது.

சுத்திகரிப்பு முறையில் பாதிப்பு
 

சுத்திகரிப்பு முறையில் பாதிப்பு

தொழிற்சாலையில் இருந்த சுத்திகரிப்பு முறை முறையாக செயல்படவில்லை என்றும் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட உற்பத்தியை ஒரு நாளைக்கு 20,000 புட்டிகளுக்குப் பதிலாக, 36,000 புட்டிகளை உற்பத்தி செய்துள்ளது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள்??

15 ஆண்டுகள்??

எனினும், இந்த தொழிற்சாலை 'எல்லாவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் பொருந்தி வரும் சட்டங்களை பின்பற்றியே' கடந்த 15 ஆண்டுகளாகவே இயங்கி வருகிறது என்று கோகோ-கோலா நிறுவனம் பதிலளித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

உத்திரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள எந்தவொரு உண்மையையும் வெளியிட அனுமதிக்காது என்று இந்நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. 'நாங்கள் தண்ணீரை பொறுப்பாகவும் மற்றும் சட்டப்படியாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

வறட்சி

வறட்சி

தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் வறண்டு போவதற்கு 'கோகோ-கோலா நிறுவனத்திற்கு நிலத்தடி தண்ணீர் எடுப்பது காரணமில்லை' என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் 2012-ம் ஆண்டின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது கோகோ-கோலா நிறுவனம்.

கேரளவிலும் இதே நிலை தான்

கேரளவிலும் இதே நிலை தான்

2005-ம் ஆண்டு கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாசிமாடாவில் இருந்த கோகோ-கோலா நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UP pollution board shuts down Coca-Cola's Varanasi plant

Beverages giant Coca-Cola's plant at Varanasi in Uttar Pradesh has been shut after the Uttar Pradesh pollution control board withdrew permission to operate over alleged violation of environmental norms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X