சுவிஸ் வங்கியில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பிரிட்டிஷ்தான்... இந்தியா வெறும் கொசு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் வெறும் 0.15 சதவீதம்தான் என்றும், இவ்வங்கிகளில் பணம் பதுக்கி வைத்துள்ள வெளி நாட்டினருடன் ஒப்பிடுகையில் உலக அளவில் இந்தியா 58வது இடத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள சில பணக்கார 'முதலை'கள், கணக்கில் வராத கருப்புப் பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கிகளில்தான் கொட்டி வருகின்றனர். நம் நாட்டில் என்னதான் பஞ்சம் வந்தாலும், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் நம்மவர்கள் பயமே இல்லாமல் சுவிஸ் வங்கிகளில் பணத்தை நிறைத்து வருகின்றனர்.

ஆனால் உலக அளவிலான பண 'முதலை'களுடன் போட்டி போடும் போது, நம் மக்கள் வெறும் 'கொசு'க்கள்தான் போலிருக்கிறது.

இந்தியாவுக்கு 58வது இடம்

இந்தியாவுக்கு 58வது இடம்

மொத்தம் 283 சுவிஸ் வங்கிகளில் இந்தியா உட்பட பல நாடுகளின் கருப்பு பணம் முடங்கியுள்ளது. இதில் 0.15 சதவீதம் மட்டுமே இந்தியர்களுடையது. கடந்த 2012ல் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள கணக்கின்படி, அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.14,000 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் 70வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 58வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாம்!! (சூப்பர்..)

யு.கே.வுக்கு முதலிடம்

யு.கே.வுக்கு முதலிடம்

சுவிஸ் வங்கிகளில் பணம் சேமித்து வைத்துள்ள வெளிநாட்டினர்களில் பிரட்டன் 20 சதவீதத்துடன் முதல் இடத்தில் (277 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள்) உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை அமெரிக்கா (193 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள்), வெஸ்ட் இண்டீஸ் (100 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள்), ஜெர்மனி (52.4 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள்), மற்றும் கெர்ன்சே (49.6 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள்) ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

சீனாவுக்கு 30வது இடம்

சீனாவுக்கு 30வது இடம்

இந்த பட்டியலில் சீனா 30வது இடத்தில் உள்ளது. பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் இந்தியாவை விட 'டாப்'பான இடத்தில் தான் உள்ளது.

பாகிஸ்தானுக்கு 74வது இடம்

பாகிஸ்தானுக்கு 74வது இடம்

இந்த லிஸ்ட்டில் இந்தியாவுக்குக் கீழே தான் நம் பக்கத்து நாடான பாகிஸ்தான் உள்ளது. இது, 69வது இடத்திலிருந்து 74வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டின் கணக்கின்படி பாகிஸ்தான் நாட்டினர் 1.44 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளை சுவிஸ் வங்கிகளில் வைத்திருந்தனர். அது 2013ல் 1.23 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாகக் குறைந்து விட்டது.

இந்தியாவுக்குக் கீழே...

இந்தியாவுக்குக் கீழே...

இந்த லிஸ்ட்டில் பிலிப்பைன்ஸ், கசகஸ்தான், ஈரான், பஹ்ரைன், மொரீசியஸ், பங்களாதேஷ், பாலஸ்தீனம், பார்படாஸ், ஈராக், புருனே, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் இந்தியாவுக்குக் கீழேதான் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiss money: India accounts for only 0.15% of wealth; UK remains on top with 20%

India has moved up to 58th rank in terms of foreign money lying with Swiss banks, but it accounts for a meagre 0.15 percent of an estimated $1.6 trillion total global wealth held in Switzerland's banking system.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X