ரூ.1,600 கோடி நஷ்டத்தை எதிர்நோக்கும் இந்திய மின்சாரத் துறை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி:இந்திய மின்சாரத்துறை 2017ஆம் ஆண்டில் ரூ.1,600 கோடி (27 பில்லியன் டாலர்) நஷ்டத்தில் செயல்படும் என உலக வங்கி கணித்துள்ளது. இத்துறையின் பிரச்சனைகளை ஆராய்ந்த உலக வங்கி, குறைவான மானியம், திருட்டு, தயாரிப்பு நிறுவனங்களில் அரசியல் தலையீடு அகிய பிரச்சனைகள் உள்ளதாகவும், இவை தொடர்ந்து நீடித்தால் அரசு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் இத்துறை நிதி பற்றாக்குறையில் தான் தவிக்கும் என உலக வங்கி அப்பட்டமாக தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் 16வது பிரதமரான நரேந்திர மோடி இந்தியாவில் இன்னும் 3 கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் அவர்களும் மின்சாரமும், இந்தியாவை தடையற்ற மின்சாரத்தை அளிக்கும் நாடாக உருவாக்க வேண்டும் என்பதை கடமையாக கொண்டு செய்பட்டு வருகிறார்.

தடையற்ற மின்சாரம்

தடையற்ற மின்சாரம்

மேலும் ந்தியாவில் தடையற்ற மின்சாரத்தை அளிக்கும் பிரமரின் திட்டத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம்

வெயிலின் தாக்கம்

2014ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் இந்தியாவில் அதிகளவில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் கடுமையான மின்சாராத் தடை ஏற்பட்டதாகவும், சில இடங்களில் மின் விநியோக உபகரணங்கள் பழுது அடைந்ததாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
 

தமிழ்நாடு

வட இந்தியாவில் கோடை காலத்தில் மட்டும் தான் இந்த பிரச்சனை இருந்தது, ஆனால் தமிழ்நாட்டில் கோடை காலம், மழை காலம் என கடந்த ஒரு வருட காலமாக மின்பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு தான் இதில் மெத்தனமாக செயல்படுகிறது என்று பார்த்தால், உலக வங்கியும் தனது ஆய்வில் தமிழ்நாட்டை ஒதுக்கியுள்ளது. (என்ன கொடும சரவணன் இது...)

வளர்ச்சி

வளர்ச்சி

உலக வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் கடந்த பத்து வருடத்தில் சுமார் 280 மில்லியன் இந்தியர்கள் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர். இத்துறை வளர உற்பத்தி நிறுவனங்களை தனது பாதையில் பயணிக்க விடுவது தான் சிறந்த வழி என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

20 வருடம்

20 வருடம்

இந்த 20 வருடத்தில் திறனற்ற சீர்திருத்தம் நடவடிக்கை, விநியோகத்தில் குளறுபடி, நிலையற்ற மின் விநியோகம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடைகளாக இருந்தது என உலக வங்கி பட்டியலிட்டுள்ளது.

காசு.. பணம்.. துட்டு... மனி...

காசு.. பணம்.. துட்டு... மனி...

மின்சாரச உற்பத்தி மட்டும் சிறப்பாக இருந்திருந்தால், மின் உபகரன உற்பத்தி நிறுவனங்களுக்கு அளித்த நிதித் தொகையில் 15,000 மருத்துவமனைகள், 123,00 பள்ளிகள் துவக்கி இருக்க முடியும் என உலக வங்கி கணிப்புகள் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian power sector faces $27 billion in annual losses: World Bank

India's power sector faces annual losses of $27 billion by 2017 unless sweeping reforms are taken to tackle inefficient subsidies, theft and political meddling in utility companies, the World Bank has said.
Story first published: Wednesday, June 25, 2014, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X