கூகுள் நிறுவனத்தின் "அண்ட்ராய்டு ஓன்" இந்தியாவில் அறிமுகம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: இந்திய சந்தைக்கு நுழைய பல நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில், இந்த போட்டியில் கூகுள் நிறுவனமும் இணைந்ததுள்ளது. இந்தியாவில் 100 டாலருக்கும் குறைவான மொபைல் போன்களை உருவாக்கும் முயர்ச்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

 

இந்த முயற்சியில் கூகுள் நிறுவனம் முன்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, இந்தியாவில் தனது வியாபாரத்தை பெருக்க முடிவு செய்துள்ளது. இதனால் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் கமர்கட்டு போல செல்போன்கள் குறைந்த விலையிலும் தரமானதாகவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ட்ராய்டு ஓன்

அண்ட்ராய்டு ஓன்

புதன்கிழமை நடந்த கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய சுந்தர் பிச்சை, அண்ட்ராய்டு ஓன் என்ற பெயரில் டுயல் சிம், எஃப் எம், 4.5 இன்ஞ் ஸ்கிரின் வசதிகள் கொண்ட போன்கள் வர உள்ளதாக அவர் தெரிவித்தார். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் ஆவார் மேலும் இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடதக்கது.

குறைந்த விலை

குறைந்த விலை

மேலும் அவர் இக்கூட்டத்தில் இந்த புதிய அண்ட்ராய்டு ஓன் போன்கள் தரமானதாகவும், விலை குறைந்ததாகவும் இருக்கும் என சுந்தர் அவர்கள் தெரிவித்தார். விலை குறைவு என்றால் எவ்வளவு என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கும். இதன் விலை 100 டாலருக்கு அதாவது 6,000 ரூபாய் குறைவானதாக இருக்கும் எனவும் அவர் தெரவித்தார்.

இந்தியாவில் தான் முதல் ரவுன்டு
 

இந்தியாவில் தான் முதல் ரவுன்டு

இந்த புதிய செல்போன்கள் இந்தியாவில் தான் அறிமுகபடுத்த உள்ளோம், இதன் பிறகு தான் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டு நிறுவனம்

கூட்டு நிறுவனம்

இந்த புதிய முயற்சியில் மைக்ரோமாக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் ஆகிய மூன்று இந்தியா மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இதன்தயாரிப்புகள் உலக நாடுகளுக்கு செல்ல உள்ளது.

தொலைதொடர்பு

தொலைதொடர்பு

மேலும் கூகுள் நிறுவனம் இந்தியா முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக தொலைதொடர்பு சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது, இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google teaming up with Micromax, Karbonn and Spice to bring low-cost phones to India

Google Inc is working with three manufacturers to develop a sub-$100 smartphone for the Indian market this fall, getting Android software into one of the fastest-growing major mobile markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X