10 ஆண்டு வெற்றி காவியத்தில் டிசிஎஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் பல துறை வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டியது சில நிறுவனங்கள் மட்டுமே இதில் டாடா குழுமம் ஒன்று. இக்குழுமத்தின் முதன்மையான தகவல் தொடர்பு சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளது, மேலும் இந்தியா அளவிலும் முதன்மையான தகவல்தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு 10 ஆண்டு செயல்பாட்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி பன்மடங்கு உயந்துள்ளது.

அந்த வகையில், 2014-15-ம் ஆண்டு பல்வகை தொழில்கள் மற்றும் சந்தைகளுக்கு நல்ல வாய்ப்புகளை கொண்டு வரும் என்பதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதாக, டி.சி.எஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் சைரஸ் மிஸ்ட்ரி கருத்து தெரிவித்துள்ளார்

நிறுவன வளர்ச்சி

நிறுவன வளர்ச்சி

இந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று, நடந்தது இதில் பேசிய திரு.மிஸ்ட்ரி, 2013-14-ம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப துறை 8.8. சதவீத வளர்ச்சியை கண்டிருந்த போது, டி.சி.எஸ் நிறுவனம் 16 சதவீத டாலர் அளவிற்கும் மற்றும் 30 சதவீத ரூபாய் மதிப்பிற்கும் வளர்ந்துள்ளது, என்று தெரிவித்தார். 'திட்டங்களை ஒழுங்கான முறையில் செயல்படுத்துவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிவிடண்ட் தொகை

டிவிடண்ட் தொகை

2013-14-ம் ஆண்டில் ரூ.32 (கடந்த ஆண்டில் ரூ.22) ஆக இருந்த பங்குகளின் மொத்த டிவிடண்ட் தொகை அளவை இறுதியாக ரூ.20- ஆக கொடுக்க டி.சி.எஸ் போர்டு பரிந்துரை செய்துள்ளதாகவும் திரு.மிஸ்ட்ரி தகவல் தெரிவித்தார்.

5 டெக்னாலஜி
 

5 டெக்னாலஜி

புதிய தொழில்நுட்பத்தின் ஐந்து டிஜிட்டல் சக்திகளாக இருக்கும், பெரியளவிலான தகவல்கள், சமூக ஊடகம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவை உலகத்தை வேகமாக மாற்றி விடும் மற்றும் அதன் விளைவகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இராமதுரை

இராமதுரை

முந்தைய காலங்களில் டி.சி.எஸ் நிறுவன்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி விட்டு, தற்போது டி.சி.எஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் திரு.இராமதுரை அவர்கள் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். திரு.இராமதுரை அவர்கள், டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி ஓய்வு கொள்கையின் அடிப்படையில் வரும் அக்டோபர் 2014-ல் பணி ஓய்வு பெறுகிறார்.

10 ஆண்டு வெற்றிக் காவியம்

10 ஆண்டு வெற்றிக் காவியம்

'பத்தாண்டுகளாக இருந்த செயல்பாடுகள் டி.சி.எஸ்-ன் கதையை உயர்தரமான இடத்திற்கு கொண்டு சென்று விட்டது.' கடந்த 2004ஆம் ஆண்டு இந்நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பதை நினைவுகூர்ந்து மிஸ்த்ரி இவ்வாறு தெரிவித்தார்.

நிறுவன மதிப்பு

நிறுவன மதிப்பு

இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 13.4 பில்லியன் டாலர்களாகும். டி.சி.எஸ் ஒன் பிரச்சாரத்தின் போது மிகப்பெரியதாக 118 நாடுகளில், 300,000 பேரை பணிக்கு வைத்துள்ள, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் இது முதன்மையானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS will play key role in new digital world, says Cyrus Mistry

Tata Consultancy Services (TCS) remains confident that 2014-15 will bring better opportunities for growth across multiple industries and markets, according to Cyrus Mistry, Chairman, TCS, and the Tata Group.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X