வாகனத் துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிப்பு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்திக் குறைவு மற்றும் விற்பனை மந்தம் காரணமாக சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்பை இத்துறை இழந்துள்ளது.

 

(2015ம் ஆண்டில் 22,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சேர்ப்போம்!! இன்போசிஸ்)

பெங்களூர் வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 37வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் பேசுகையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

வாகனத் துறையில் 2.9 கோடி பேர்

வாகனத் துறையில் 2.9 கோடி பேர்

வாகனத் தயாரிப்புக்குத் தேவையான இரும்புத் தாது சுரங்கங்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை இத்துறையில் சுமார் 2.9 கோடி பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

30 லட்சம் பேருக்கு வேலை காலி

30 லட்சம் பேருக்கு வேலை காலி

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வாகன உற்பத்தியின் வளர்ச்சி குறைந்து, வணிக வாகனங்களின் விற்பனையும் குறைந்துள்ளது. இதையடுத்து இத்துறையில் சுமார் 10 சதவீதம் பேர் வேலைவாய்ப்புகள் பாதிப்பு அடைந்துள்ளது.

தடைக்கல்

தடைக்கல்

இத்துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்பு பாதிப்படைந்ததுள்ளது சாதாரண விஷயம் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கியத் தடைக்கல் ஆகிவிட்டது.

முக்கியத்துவம்
 

முக்கியத்துவம்

நாட்டிலுள்ள தயாரிப்புத் துறைகளில் வாகனத் தயாரிப்புத் துறைதான் முக்கியமானது. அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் கூட அது முக்கியப் பங்களிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாகனங்களின் இயக்கம் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது, உலகம் முழுவது ஸ்தம்பித்து போய்விடும்.

தொழிற்சாலைகள் கவனிக்கப்படவில்லை

தொழிற்சாலைகள் கவனிக்கப்படவில்லை

கொள்கை ரீதியாக மார்க்கெட் இந்தியா, தொழிற்சாலை இந்தியா என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், மார்க்கெட் இந்தியாவை நன்றாகக் கவனிக்கும் அளவுக்கு, தொழிற்சாலை இந்தியா கவனிக்கப்படவில்லை என்று தான் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'25-30 lakh jobs lost in automotive sector in last 2 yrs'

India's automotive industry has lost about 25-30 lakh jobs in the last two years due to reduction in growth rate and slowdown in commercial vehicles.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X