எண்ணெய் இறக்குமதிக்கான நிலுவை தொகையை குறைத்த இந்தியா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஈராக் அரசிற்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் பிரச்சனைகளில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இப்பிரச்சனை அரசிற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கிறது என்று சொல்வதை விட ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் என்ற இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை என்று சொன்னால் மிகையாகது. இப்பிரச்சனையின் எதிரொலி இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான ஈராக்கின் அண்டை நாடான ஈரானிளும் உள்ளது.

 

இந்நிலையில் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இப்பிரச்சனைகளால் இறக்குமதி பாதிப்பு அடைய இடம் கொடுக்க கூடாது என்று நினைத்த இந்தியா தனது எண்ணெய் இறக்குமதிக்கான நிலுவை தொகையில் நான்கில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தியுள்ளது.

எண்ணெய் இறக்குமதிக்கான நிலுவை தொகையை குறைத்த இந்தியா

இதற்கான பணப்பரிவர்த்தனை கடந்த வாரம் புதன் அல்லது வியாழன் அன்று நடைபெற்றதாக எண்ணெய் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 2013ஆம் ஆண்டில் ஈரானின் அனுஆயுத திட்டத்தின் சில பிரச்சனைகளால் அமெரிக்கா தனது பணம் செலுத்தும் தளத்தை முடக்கியது. இதனால் இந்திய எண்ணெய் இறக்குமதி செய்யும் மதிப்பில் 45 சதவீதத்தை இந்திய பணமாக யூசிஒ வங்கியின் கொல்கத்தா கிளையின் மூலம் செலுத்தி வருகிறது.

மீதமுள்ள தொகையான 1.65 பில்லியன் டாலரை முன்று தவணைகளாக 550 மில்லியன் டாலர் என்ற வீதத்தில் ஈரானுக்கு யூஏஇ சென்ரல் வங்கியின் மூலம் பணத்தை செலுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India pays Iran $550 million to partly clear oil import dues

India has made a $550 million payment to Iran and cleared a fourth of its dues for oil imports from the Persian Gulf nation.
Story first published: Monday, June 30, 2014, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X