இன்போசிஸ் நிறுவனத்தில் 13வது உயர் அதிகாரி ராஜினாமா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ-வான விஷால் சிக்கா நிறுவன பொறுப்புகளை ஏற்றுகொண்ட பின்பும் இந்நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் ராஜினாமா கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

விஷால் சிக்கா பொறுப்பேற்று, நாராயண மூர்த்தி மற்றும் ரோஹன் மூர்த்தி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பு முதல் ஆளாக இந்நிறுவனத்தின் டாப் டக்கர், தூள் டக்கர் என போற்றப்படும் உயர் மட்ட அதிகாரிகளின் ஒருவரான முரளி கிருஷ்ணா இன்போசிஸ் நிறுவனத்திற்கு டேக்கா கொடுத்துள்ளார்.

முரளி கிருஷ்ணா

முரளி கிருஷ்ணா

இவர் இந்நிறுவனத்தின் கம்பியூட்டர் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவின் தலைவர் மற்றும் இந்நிறுவனத்தின் துணை தலைவர் ஆவார். மேலும் நிர்வாக குழுவில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தும், அதிகாரிகள் வெளியேறுகிறார்கள் என்றால் இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள முக்கியமான பிரச்சனையை இன்னும் உயர்மட்ட குழு களையவில்லை என்பதை உண்மை.

என்ன காரணம்

என்ன காரணம்

இன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் படி "தனது சொந்த காரணங்களுக்காக இவர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்" என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வழக்கமாக இன்போசிஸ் நிறுவனம் சொல்லும் கருத்து தானே என்று நீங்கள் நினைப்பதும் சரி தான்.

புதிய அதிகாரி

புதிய அதிகாரி

மேலும் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முரளி கிருஷ்ணன் அவர்களின் பதவிக்கும் பொறுப்புகளை கவணிக்கவும் புதிய அதிகாரிகளை நியமணம் செய்யப்பட்டது என இந்நிறுவனம் தெரிவித்தது.

13வது உயர் அதிகாரி
 

13வது உயர் அதிகாரி

இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13 உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் சற்று குறைந்தது என்று சொன்னால் மிகையாகாது.

 கூத்தாடிக்கு கொண்டாட்டம்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு ஏற்ப இண்போசிஸ் நிறுவனத்தின் இந்த நிலையை பயன்படுத்தி டிசிஎஸ், எச்சிஎல், சிடிஎஸ் ஆகிய நிறுவனங்கல் சந்தியில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys top executive K Murali Krishna quits

In the first top-level exit at Infosys after Vishal Sikka was named as its CEO, K Murali Krishna, Senior Vice President and Group Head of computers and communications division, has resigned.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X