100 வயதை தொட்ட எட்டு இந்திய நிறுவனங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியா ஒரு ரெப்ரிஜிரேட்டரை தானாகவே உற்பத்தி செய்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்திய சந்தைகளில் டீசல் எஞ்சன் எப்பொழுது அறிமுகமானது என்று தெரியுமா? இந்தியாவின் பழமையான தொழில் நிறுவனங்களில் இன்றளவும் இளமையுடன் இருக்கும் நிறுவனங்கள் எவையென்று தெரியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேட, நீங்கள் 100 அல்லது 200 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்ல வேண்டும்.

அனைவரரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, இதுபோன்ற வளமான வரலாற்றை நிரம்பவும் கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. தொழில் மந்தம் அல்லது தளர்வு என எத்தனையோ ஏற்ற இறக்கங்களையும் கண்டு, இன்றளவும் நிலைத்து நிற்கும் இந்நிறுவனங்களுக்கு கதாநாயக அந்தஸ்தை பரிசாகக் கொடுக்கலாம் என்பது திண்ணம்.

இத்தனை சூழல்களையும் வெற்றிகரமாக கடந்து வந்து, நிலைத்து நிற்க வெறும் வியாபார நுணுக்கம் மட்டுமே கைகொடுத்து விடாது, வாடிக்கையாளர்களுக்கு பொறுப்பாக இருத்தல், தரமான பொருட்களை கொடுத்தல் மற்றும் நற்பெயரை பெற்றிருத்தல் என பல்வேறு காரணிகள் தான் ஒரு நிறுவனத்தின் வாழ்க்கைப் பயணத்தை முடிவு செய்கின்றன.

அந்த வகையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலைத்து நிற்கும் 10 இந்திய நிறுவனங்களைப் பற்றி இப்போது பார்போம்!

பிரிட்டானியா

பிரிட்டானியா

295 ரூபாயை துவக்க மூலதனமாகக் கொண்டு, 1892-ம் ஆண்டு பிரிட்டானியா துவக்கப்பட்டது. கொல்கத்தாவில் சிற்சில வீடுகளில், இந்த நிறுவனம் துவக்கப்பட்ட போது, போருக்கு செல்லும் வீரர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட்களை தருவதே நோக்கமாக இருந்தது.

1918-ம் ஆண்டு, C.H.ஹோம்ஸ்-உடன் திரு.குப்தா சேர்ந்து பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியை துவங்கினார்.

 

டாபர்

டாபர்

இந்தியாவிலுள்ள ஆயுர்வேதிக் மருந்து உற்பத்தியில் அரசனாகத் திகழும் நிறுவனம் டாபர். கிராமங்களுக்கு ஆயுர்வேத மருந்துகளைக் கொடுக்கும் நோக்கத்துடன், டாக்டர்.S.K.பர்மன் என்பவர் 1884-ம் ஆண்டு டாபர் நிறுவனத்தை தொடங்கினார்.

கிராமப்புற சூப்பர் மார்க்கெட்களில் தன்னுடைய நிலையை மிகவும் ஸ்திரமாக வைத்துள்ளது டாபர் நிறுவனம். இந்த நிறுவனத்தால் டாபர் சியவன்ப்ராஸ், டாபர் ஹனி, ஹஜ்மோலா மற்றும் டாபர் அம்லா ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 2012-2013-ம் ஆண்டின் வருடாந்திர அறிக்கைப் படி டாபர் நிறுவனத்தின் விற்பனை சுமார் 6146.4 கோடிகளாகும்.

 

கிர்லோஸ்கர் குழுமம்

கிர்லோஸ்கர் குழுமம்

இந்தியாவின் மிகவும் பழமையான பல்துறை நிறுவனமாக கிர்லோஸ்கர் உள்ளது. 1888-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் பம்ப்கள், எஞ்சின்கள், கம்ப்ரஸ்ஸர்கள், சில்லர்கள், வார்ப்பிரும்பு கட்டுமானம் மற்றும் பலவற்றை உற்பத்தி செய்கிறது. டொயோட்டாவுடன் கூட்டாக சேர்ந்து கிர்லோஸ்கர் நிறுவனம் ஆட்டோமொபைல், மேம்பாலம் மற்றும் பாலங்களைக் கட்டும் தொழில்களிலும் இறங்கியுள்ளது.

1926-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் டீசல் எஞ்சினை கிர்லோஸ்கர் அறிமுகம் செய்தது, இன்றைய நிலையில் குழாய்கள், வால்வுகள் தயாரிப்பு மற்றும் ஜெனரேட்டர் உற்பத்தி ஆகியவற்றில் கிர்லோஸ்கர் முடிசூடா மன்னனாக திகழ்கிறது.

 

காட்ரேஜ் குழுமம்

காட்ரேஜ் குழுமம்

1897-ம் ஆண்டு, ஆர்டேசிர் காட்ரேஜ் (Ardeshir Godrej) என்பவரால் நிறுவப்பட்ட இந்த தொழில் குழுமம் உயர்தர பாதுகாப்பிற்கான பூட்டுகள், ஸ்பிரிங் இல்லாத பூட்டுகளை தயாரித்து வருகிறது. 1932-ம் ஆண்டில் காட்ரேஜ் மற்றும் பாய்ஸ் (Boyce) லிமிடெட் லையாபிலிட்டி கம்பெனியாக உருவானது. 1955-ம் ஆண்டில் காட்ரேஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் டைப்ரைட்டரை தயாரித்தது. GE நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் முதல் ரெப்ரிஜிரேட்டரையும் காட்ரேஜ் குழுமம் தயாரித்தது,

 

ஷாலிமார் பெயிண்ட்

ஷாலிமார் பெயிண்ட்

தென் கிழக்கு ஆசியாவின் முதல் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை ஷாலிமார் பெயிண்ட் பெற்றுள்ளது. 1902-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹெளராவில், A.N.டர்னர் மற்றும் A.N.ரைட் ஆகியோரால் இந்நிறுனம் தொடங்கப்பட்டது.

ஷாலிமார் பெயிண்ட் நிறுவனத்தின் 111-வது வருடாந்திர அறிக்கைப்படி, வியாபாரம் மற்றும் பிற செயல்பாடுகள் வழியாக 59,617 லட்சம் வருமானமாக பெற்றுள்ளது இந்நிறுவனம்.

 

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸெர்வான்ஜி டாடாவின் கனவுத் திட்டத்தின் முயற்சியாக, 1907-ம் ஆண்டு தொராப்ஜி டாடா அவர்கள், டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையை சாக்கி கிராமத்தில் (தற்போதைய ஜார்கண்ட் மாநிலம்) தொடங்கினார்.

2012-ம் ஆண்டில் உலகின் 12-வது பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமாக டாடா ஸ்டீல் உள்ளது. இந்நிறுவனம் ஒரு வருடத்திற்கு 23.8 மில்லியன் டன் இரும்பைத் தயாரிக்கிறது.

 

செஞ்சூரி டெக்ஸ்டைல்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீஸ்

செஞ்சூரி டெக்ஸ்டைல்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீஸ்

மும்பையை மையமாகக் கொண்டு 1897-ம் ஆண்டு தொடங்கப்பட், செஞ்சூரி டெக்ஸ்டைல்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காகிதம், சிமெண்ட் மற்றும் துணிகளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் தன்னுடைய உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைகளில் சுமார் 45 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

 

ஐ.டி.சி (ITC)

ஐ.டி.சி (ITC)

கொல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டு, 1910-ம் ஆண்டு இம்பீரியல் டொபாக்கோ கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் ITC நிறுவனம் தொடங்கப்பட்டது. ITC 5 வகையாக வியாபாரத் துறைகளில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. அவை : ஹோட்டல்கள், பேப்பர் போர்டுகள் & பேக்கேஜிங், அக்ரி பிஸினஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் FMCG.

1974-ம் ஆண்டு ஐ.டி.சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்நிறுவனம், 27,136 கோடிகளை தன்னுடைய புகையிலை பிரிவிலிருந்து வருமானமாக பெறுகிறது. இது அந்நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 56 சதவீதமாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's 100 Year Old Companies That are Still Young and Strong

Let’s take a glance into the exciting journey of the 10 Indian companies that survived for more than 100 years and still counting.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X