இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் நம் நாட்டை கலாச்சார ரீதியாக வளமாக்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் வளமாக்குகின்றன. அண்மையில், நிதிக்குழுவானது தனது 13-வது அறிக்கையில் இந்தியாவின் வளரும் பொருளாதாத்திற்காக வருமானத்தை சம்பாதிக்கும் மற்றும் ஊக்கம் தரும் மாநிலங்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இதில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று அதிகளவிலான மொத்த தேசிய உற்பத்தியுடன், சிறந்த வரி வரிமானங்களைக் கொடுக்கும் மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் நம் தமிழ்நாடும் ஒன்று.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

வரி வருமானம் : 4,51,800 கோடி (76 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மாநிலமாகவும், கனவுகளின் தேசமாகவும் கருதப்படும் மகாராஷ்டிரா இந்தியாவின் வருமானத்தை உயர்த்துவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் தான் இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகவும் பணக்கார மாநிலமாகவும், அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமாகவும் மற்றும் நகர்மயமாகி இருக்கும் மாநிலமாகவும் மகாராஷ்டிரா இருப்பதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம்

வரி வருமானம் : 3,23,400 கோடி (54 பில்லியன் டாலர்கள்) : தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்-தொழில்நுட்பம் என இரு பெரும் துறைகளைக் கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊட்டம் கொடுத்து வரும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.இம்மாநிலத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த சமூக, இயற்கை சார்ந்த மற்றும் தொழில் கட்டுமான வசதிகளும் மற்றும் இணையத்தைப் பொறுத்த வரையில் சிறந்த தொடர்புகளும் உள்ளன.

இந்தியாவில் முதன்முதலில் மின்சார வன்பொருள் கொள்கையை (Electric Hardware Policy) (2012-17) கொண்டு வந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தின் அரசாங்கம் 200-க்கும் மேற்பட்ட மின்சார குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

உத்திரப் பிரதேசம்
 

உத்திரப் பிரதேசம்

வரி வருமானம் : 2,96,000 கோடி (50 பில்லியன் டாலர்கள்) : உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தன்னகத்தே கொண்டிருக்கும் உத்திரப் பிரதேச மாநிலம், தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை சுற்றுலாவில் இருந்தே பெறுகிறது. மேலும், வளம் மிக்க கங்கைச் சமவெளிகள், இம்மாநிலத்தின் வேளாண்மைத் துறையை வளமாக செயல்பட வைக்கின்றன.

தமிழ் நாடு

தமிழ் நாடு

வரி வருமானம் : 2,73,400 கோடி (46 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான தமிழ் நாடு, மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் மிகவும் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக சென்னைத் துறைமுகத்தை கொண்டுள்ள இம்மாநிலம், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வருமானத்தை தாராளமாக ஈட்டித் தருகிறது. அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் நாட்டிலேயே 3-வது இடத்தைப் பெற்றுள்ளது தமிழ் நாடு மாநிலம்.

100 சதவீத முழுமையான சாலை தொடர்புகளை பெற்றிருக்கும் முதலாவது மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ் நாடு உள்ளது. நிறைய பொறியியல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகள் இம்மாநிலத் தலைநகர் சென்னையைச் சுற்றி அமைந்துள்ளன. அது மட்டுமல்லாமல், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கான தொழில்களும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ் நாடு உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

வரி வருமானம் : 2,52,600 கோடி (42 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் தெற்கத்திய மாநிலமான கர்நாடாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மற்றும் உலகிலேயே 4-வது பெரிய தொழில்நுட்ப மையமாகவும் உள்ளது. இம்மாநிலத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த தொலைதொடர்பு கட்டுமான வசதிகளும் மற்றும் சுகாதார கவனிப்பு வசதிகளும் உள்ளன.

குஜராத்

குஜராத்

வரி வருமானம் : 1,79,600 கோடி (30 பில்லியன் டாலர்கள்) : வளர்ச்சிக்கான மாதிரியை வழி நடத்துவதில் இந்தியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக குஜராத் போற்றப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள குஜராத் மாநிலம், 1600 கிமீ நீளமுடைய மிகவும் நீளமான கடற்கரையைக் கொண்டதாகவும் உள்ளது. இது அற்புதமான கட்டுமான வசதிகளையும், உறுதியான பெட்ரோலியம் மற்றும் கல்வித் துறையையும் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முக்கியமான இந்தியாவில் வசிக்காத இந்தியர்களின் தயாகமாக இருக்கும் குஜராத் மாநிலம், தொழில் துறை, சக்தி துறை, துறைமுகங்கள், சாலைகள், வேளாண்மை மற்றும் தாதுப்பொருட்கள் ஆகிய துறைகளுக்கான கொள்கைகளை முதன்மைப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

வரி வருமானம் : 1,69,900 கோடி (29 பில்லியன் டாலர்கள்) : மிகவும் அதிகமான அளவிற்கு வேளாண்மையை நம்பியிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தவர்களுக்கு, இந்த துறை தான் வருமானத்திற்கான முதன்மையான ஆதாரமாகும். அதே நேரத்தில் சிறுதொழில் நிறுவனங்களால் அதிகமான வருமானங்கள் வருவதுடன், பாரம்பரிய அமைப்பு முறைகளும் மேற்கு வங்காளத்த்தில் உறுதியாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wealthy States Guiding India Towards Prosperity

The different states in India not only make the country rich culturally but also financially. Recently Financial Commission came out with its 13th report where it listed down the states that are generating revenues and contributing towards the growing economy of India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X