டிஜிட்டல் வங்கிக் கிளைகளை துவங்கிய எஸ்.பி.ஐ!! "எஸ்.பி.ஐ-இன்-டச்"

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிக பெரிய வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கித்துறையை அடித்த கட்ட தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு கொண்டு செல்ல, வங்கிகள் மற்றும் வங்கிச் சேவைகள் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்து வகையில் 6 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.

 

இந்த வங்கி கிளைகளில் வங்கியின் முக்கிய சேவையான உடனடி வங்கி கணக்கு மற்றும் தனிநபர் கிரேடிட் கார்டு போன்ற சேவைகளை சில நொடிகளில் பெற முடியும், இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் கிடைக்கும் பெரும்பாலான சேவைகள் அனைத்தையும் இங்கு பெற முடியும். இச்சேவையை எஸ்.பி.ஐ வங்கி "எஸ்.பி.ஐ இன் டச்" (sbiINTOUCH) என்று அழைக்கிறது.

6 இடங்களில்

6 இடங்களில் "எஸ்.பி.ஐ இன் டச்"

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களுரூ, சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கியமான 6 நகரங்களில் எஸ்.பி.ஐ வங்கி இந்த டிஜிட்டல் வங்கிக் கிளையை திறந்துள்ளது. இவ்வங்கியின் 60வது துவக்க விழாவை முன்னிட்டு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவில் வரைவில் இச்சேவை துவங்கும், அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

பட்ஜெட் தயாரிப்பில் படு பிசியாக இருந்த நிதியமைச்சர் இந்த சிறப்பான முயற்சியை பாரட்டும் வகையில் இச்சேவையை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். மேலும் இந்த டிஜிட்டல் வங்கி கிளைகள் வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என் ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

அருண் ஜேட்லி
 

அருண் ஜேட்லி

இச்சேவை சிறந்த தொழிற்நுட்பத்துடனும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேட் வங்கி செய்த இந்த முயற்சி இந்திய வங்கித்துறையில் கண்டிப்பாக புரட்சிகரமாகவும், மையில்கல்லாகவும் இருக்கும் என ஜேட்லி தெரிவித்தார்.

செலவு குறைவு..

செலவு குறைவு..

மேலும் இத்தகைய திட்டங்கள் நாளிடையில் மக்களும் சிறப்பான சேவையை அளிக்கவும், வங்கிகளுக்கு மிக பெரிய அளவில் செலவை குறைக்குவும் வழிவகுக்கும், குறிப்பாக ஆட்கள் தேவை குறைக்கும்.

டிஜிட்டல் ஸ்டோர்

டிஜிட்டல் ஸ்டோர்

இந்த திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டேட் பாங்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பேசுகையில், டிஜிட்டல் ஸ்டோரில் டெபிட் கார்டு, இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்டு, கிரேடிட் கார்டு போன்ற அனைத்து விதமான சேவைகளும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

அக்செஞ்சர்

அக்செஞ்சர்

இந்த சேவைக்கு தொழிற்நுட்ப ரீதியில் முழுவதும் உருதுணையாக இருந்தது அக்செஞ்சர் நிறுவனம். மேலும் இச்சேவையை குறித்து அக்செஞ்சர் நிறுவனமே வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘sbiINTOUCH': SBI launches 6 digital branches nationally

Launching its next generation banking initiative, SBI today opened six digital branches, which offer services like instant account opening and personalised debit cards.
Story first published: Wednesday, July 2, 2014, 10:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X