இந்திய பாதுகாப்பு துறையில் 49% அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டுக்கான அளவுகோளை உயர்த்த மத்திய அரசும் நிதியமைச்சகமும் கடந்த ஒரு மாதக் காலமாக தீவர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் இத்துறையில் அன்னிய முதலீட்டை 51 சதவீதமாக உயர்த்துவதற்கு கடுமையான எதிர்பபுகள் கிளம்பியது.

அதிலுள்ள பிரச்சனைகளை உணர்ந்து அதனை களைய இந்திய பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு இத்துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது நிதியமைச்சகம். இதற்கான ஒப்புதலும் கிடைத்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இந்த அன்னிய முதலீட்டின் மூலம் இந்திய மற்றும் அன்னிய நிறுவனங்கள் இணைந்து ரானுவ உபகரணங்களை, இந்தியாவில் தயாரிக்க நிறுவனங்களை அமைக்க முடியும். இதனால் இந்தியா ஆயுதங்களுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை இருக்காது. மேலும் ஒவ்வொரு வருடமும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பல கோடி டாலர்கள் செலவு செய்கிறது. இந்த அன்னிய முதலீட்டின் மூலம் இந்த தொகை கணிசமாக குறையும்.

மோடி தேர்தல் வாக்குறுதி

மோடி தேர்தல் வாக்குறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதில் இந்திய ஆயுத உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும், ஆயுத உற்பத்திக்கான மையமாக இந்தியாவை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

ரானுவ ஆயுத உற்பத்தி துறை

ரானுவ ஆயுத உற்பத்தி துறை

இந்திய கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆயுத உற்பத்திக்கான அன்னிய முதலீட்டுக்கு 26 சதவீதம் ஒதுக்கியது. இதனால் இத்துறை பெரிய அளவில் வளரவில்லை, எனவே நாடும் இத்துறையின் மூலம் குறிப்பிடதக்கவாறு லாபம் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆயுத இறக்குமதி

ஆயுத இறக்குமதி

இந்திய உலகளவில் அதிக ஆயுத இறக்குமதி, குறைந்த ஏற்றுமதி செய்யும் டாப் 10 நாடுகளில் ஒன்று. மேலும் மத்திய அரசின் பட்ஜெடில் ரானுவத்திற்காக ஒதுக்கும் தொகையில் பெரும் பகுதி ஆயுத இறக்குமதிக்காகவே செலவு செய்கிறது.

 

 

உற்பத்தி

உற்பத்தி

இதன் மூலம் இந்தியாவில் அதிகப்படியான ரானுவ உபகரணகள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இந்திய குறைந்த விலை உபகரணங்களை பெறவும், ஏற்றுமதியின் மூலம் அதிகப்படியான வருமான கிடைக்கவும் இந்த அன்னிய முதலீடு வழிவகுக்கும். மேலும் இத்தகைய நிறுவனங்கல் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கினால் இத்துறை இன்னும் சிறப்பான பலனை இந்தியாவிற்கு கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Defence ministry suggests 49% FDI in defence sector

The defence ministry has suggested raising the cap in FDI in defence sector to 49 per cent from 26 per cent now to help in developing partnerships between Indian and foreign military hardware manufacturing firms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X