மாத துவக்கத்தில் பர்ஸை பதம் பார்க்கும் ஆன்லைன் ஷாப்பிங்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரகளின் எண்ணிக்கையும், நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடந்து வரும் நிலையில் நம் நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்போது ஆன்லைன் ஷாப்பிங் வசதியாக இருந்தாலும், சிலரும் அது பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதுவும் ஐடி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மக்களுக்கு இது ஒரு பேஷனாக மாறி வருகிறது.

 

இத்தகைய ஆன்லைன் ஷாப்பிங் குறித்த ஒரு புள்ளிவிவரத்தை பாஸ்டன் கன்சல்டன்ஸி குழுமம் (BCG) வெளியிட்டுள்ளது.

2016க்குள் 14 சதவீதம்

2016க்குள் 14 சதவீதம்

BCGஇன் புள்ளிவிவரப்படி, கடந்த 2013ல் 6 சதவீதமாக இருந்த ஆன்லைன் ஷாப்பிங், வரும் 2016க்குள் 14 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள் மாத இறுதி முதல் அடுத்த மாத துவக்கம் வரை அதிரடி ஆஃபர்களை அள்ளி விசுகிறது. இதனால் மக்கள் கண்ணை முடிக்கொண்டு நமக்கு இது தேவையா?? இல்லையா?? என்பதை கூட யோசிக்காமல் வாங்கி வருகின்றனர். அது மிகவும் தவறான ஒரு செயல்.

25% ஆன்லைன் ட்ராவல் புக்கிங்

25% ஆன்லைன் ட்ராவல் புக்கிங்

ஏற்கனவே பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான டிக்கெட்டுகளில் 25 சதவீதம் ஆன்லைன் மூலம்தான் புக் செய்யப்படுவதாகவும் BCG தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்
 

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் மூலமாகப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் செய்தித் தாள்களில் ஏதாவது ஒரு மூலையில் அல்லது ஏதாவது ஒரு டி.வி.யில் எப்போதாவது ஆன்லைன் ஷாப்பிங் குறித்த அறிவிப்புகள் வெளிவரும். சில பேர் மட்டும்தான் அதைப் பார்த்து ஆர்டர் செய்வார்கள்.

விஸ்வரூப வளர்ச்சி

விஸ்வரூப வளர்ச்சி

ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக மட்டுமே ஏகப்பட்ட டி.வி. சேனல்கள் உலாவி வருகின்றன. மேலும் ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் இலவசங்களும் குண்டக்க மண்டக்க கிடைக்கின்றன.

நோகாமல் நொங்கு திங்கலாம்

நோகாமல் நொங்கு திங்கலாம்

இப்படித்தான் ஆன்லைன் ஷாப்பிங் தாறுமாறாக எகிற ஆரம்பித்துள்ளது. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு சீப் பர்ச்சேஸ் செய்ய நமக்கு கசக்கவா செய்யும்?

நகரம் vs. கிராமம்

நகரம் vs. கிராமம்

நகர்ப்புற மக்கள் (34%) மட்டுமின்றி ஏகப்பட்ட கிராமத்து மக்களும்கூட (25%) ஆன்லைனில் தான் பொருள்களை வாங்குகிறார்கள்.

இணையம்

இணையம்

2013ல் 28 சதவீதமாக இருந்த நகர்ப்புற இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 2016ல் 47 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

மொபைல் இணையம்

மொபைல் இணையம்

நகர்ப்புற இணையப் பயனாளர்களில் 57 சதவீதம் பேர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும், 45 சதவீதம் பேர் மொபைல் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் அப்புள்ளிவிவரம் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online shopping to more than double by 2016: Study

Online shopping by urban consumers will more than double over the next two years in the country to 14 per cent from 6 per cent last year, says a Boston Consultancy Group report. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X