புதிய உயரத்தை தொட்ட அமெரிக்க பங்கு சந்தைகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: அமெரிக்கா பங்கு சந்தை பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய உயரங்களை தொட்டுள்ளது. குறிப்பாக புதன்கிழமை நடந்த வர்த்தம், தனியார் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதால் பங்கு முதலீட்டாளர்கள் தனியார் துறை பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர்.

 

அமெரிக்காவின் எம்.கே.எம் பார்ட்னர்ஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் தகவல் படி எஸ்&பி சந்தையில் வர்த்தகம் சிறப்பாக இருந்ததாகவும், அவை 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தை ஒத்திருந்ததாகவும் இந்நிறுவனம் தெரவித்தது.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்தால் டோவ் மற்றும் எஸ் & பி 500 சந்தைகள் வர்த்தகத்தில் புதிய உயரங்களை தொட்டதுள்ளது. இதில் டோவ் 0.2 அதிகரித்து 17,000 புள்ளிகளுக்கு சற்று குறைவாக பதிவாகி புதிய சாதனையை படைத்துள்ளது. அதேபோல் எஸ் & பி 500 சந்தையில் 1.5 உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

தனியார் துறை

தனியார் துறை

அமெரிக்காவில் இருக்கும் தனியார் துறை நிறுவனங்களில் கடந்த ஜூன் மாதம் கணிப்புகளை உடைத்து சுமார் 281,000 நபர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால் மே மாதம் கணிப்புகளுக்கும் குறைவான அளவில் மட்டும் ஆட்களை சேர்த்துள்ளது.

பங்கு சந்தை
 

பங்கு சந்தை

17,000 புள்ளிகள் என்ற வெற்றி இலக்கை, சந்தை நிலையாக இருக்கும் தருவாயில் அனைத்து விதமான வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் தொடுவோம் என நார்த்தன் டிரஸ்ட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜிம் மெக்டோனால்டு தெரிவித்தார்.

சந்தை உயர்வு

சந்தை உயர்வு

டோவ் ஜோன்ஸ், எஸ் & பி 500 மற்றும் நாய்டாக் ஆகிய முக்கிய பங்கு சந்தைகள் அனைத்தும் உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக உற்பத்தி துறை, மற்றும் கனிம வள துறை நிறுவனங்கள் அனைத்தும் உயர்வை சந்தித்துள்ளது.

நாஸ்டாக் மற்றும் நியூயார்க் பங்கு சந்தை

நாஸ்டாக் மற்றும் நியூயார்க் பங்கு சந்தை

புதன் கிழமை நாஸ்டாக் சந்தையின் 53 சதவீத பங்குகளும், நியூயார்க் பங்கு சந்தையில் 61 சதவீத பங்குகளும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. தோரயமாக சுமார் 4.79 பில்லியன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wall Street ends flat ahead of payrolls; S&P at record

U.S. stocks ended one of their flattest sessions in years on Wednesday as a positive read on private sector employment wasn't enough to interest buyers ahead of the highly anticipated June payrolls report.
Story first published: Thursday, July 3, 2014, 16:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X