வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு புதிய பட்ஜெட்டில் என்ன பலன்??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட் சாதகமாக அமையும் என்று பல தரப்புகள் தெரிவிக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்திய ரியல் எஸ்டேட் துறை சாமானியர்களுக்கு ஏற்றதாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான விலை, வட்டி வகிதங்கள் மற்றும் அசுர உயரத்திற்கு வளர்ந்துள்ள வரி ஆகியவையே கராணங்களாக கூறப்படுகிறது.

 

இதனால் சாமானிய மக்களிடையில் வீடு, மனை வாங்கும் எண்ணம் அதிகளவில் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கிறது. மேலும் விற்பனை குறைந்ததால் கட்டுமான நிறுவனங்களின் தொழில் மந்தமடைந்துள்ளது.

பட்ஜெட் 2014

பட்ஜெட் 2014

இந்த புதிய பட்ஜெட் புதியாதாக வீடு மற்றும் மனை வாங்குவேருக்கும், கட்டுமான நிறுவனங்கள மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகவும் சாதகமாக அமைக்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துறையில் செய்யப்படும் மாற்றம் இந்தியாவின் பல துறைகளை நலம் பெற செய்யும். இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக அமையும் சில விஷயங்களை இங்கே பார்போம்.

25 இலட்ச கடனுக்கு வரி குறைப்பு

25 இலட்ச கடனுக்கு வரி குறைப்பு

25 இலட்சத்திற்கு குறைவாக வீட்டுகடன் வாங்குபவர்களுக்கு வருமான வரியில் 1 இலட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் என நிதியமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திட்டம் மார்ச் 31, 2014 வரை மட்டுமே என்று அறிவித்திருந்தது, ஆனால் இந்த பட்ஜெட்டில் அதன் காலவரையை அதிகரிக்கப்படுவதாக தெரிகிறது.

சொத்து மாற்றத்திற்கு 1% வரி
 

சொத்து மாற்றத்திற்கு 1% வரி

50 இலட்சத்திற்கும் அதிக மதிப்புடைய சொத்துக்களை பெயர் மாற்றம் செய்யப்படும் போது, சொத்து மதிப்பிற்கு 1 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு இருந்தது. இந்த பட்ஜெட்டில் அதை 1 கோடி ரூபாய் வரை உயர்த்தபோவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பெரு நிறுவனங்கள் மற்றும் இந்தியா மக்கள் தொகையில் இருக்கும் 1.5% பணக்காரர்களுக்கும் இந்த சலுகை அதிகளவில் பயன்படும்.

ஸ்டாப் டியூட்டி சட்டத்தில் மறுஆய்வு

ஸ்டாப் டியூட்டி சட்டத்தில் மறுஆய்வு

பொதுவாக ஒரு சொத்தை விற்கும்போதோ வாங்கும்போதோ, அல்லது பிறர்க்கு மாற்றி எழுதி கொடுக்கும் போது சொத்து மதிப்பில் சில சதவீதங்களை நாம் ஸ்டாப் டியூட்டியாக செலுத்தி வருகிறோம். இதை சதவீதத்தை மாநில அரசு தான் முடிவு செய்கிறது. இதை இந்திய சட்டத்தில் 43சிஏ மற்றும் 50சி ஆகிய சட்டங்களை மறு செய்து, இதை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ முடிவு செய்ய உத்திரவிட உள்ளது மத்திய அரசு.

வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி

வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி

பொதுவாக வங்கிகளில் 1,50,000 ரூபாய்க்கு வீட்டு கடன் பெற்று இருந்தால் அதற்கு வருமான வரியில் தள்ளுபடி செய்ய முடியும், இந்த அளவீட்டை தற்போது 500,000மாக உயர்த்த ரியல் எஸ்டேட் அமைப்பு நிதியமைச்சகத்தில் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இதை பற்றி கருந்து எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2014: Four tax-relief measures that home-buyers need

Every Indian aspires to buy a house and provide shelter to his family. However, this is easier said than done due to several constraints, such as high prices and interest cost and multiplicity of tax. A slump in the economy and the ensuing uncertainties around disposable income growth, besides the above factors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X