மந்தமான வளர்ச்சியில் இந்திய விமான துறை.. எட்ட முடியாத உயரத்தில் சீனா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் விமான பயண சேவை 6.2 சதவீத அளவிற்கு உறுதியாக வளர்ந்திருக்கும் போது, இந்திய சந்தையில் மட்டும் 'குறைவான' 4 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டுள்ளதாக, சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் விமான பயணம் செய்வது 'தேவைகளை முன்னோக்கி கொண்டு செல்லும் அறிகுறிகள் நிலையாக வளர்ந்து வருகின்றன', ஆனால் இந்தியாவிலோ, 'இதற்கு மாறாக, மே மாதத்தில் 4.1 சதவீதமாக குறைவான வளர்ச்சியே பதிவு செய்யப்பட்டுள்ளது', என்று சர்வதேச விமான பயண அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசு

புதிய அரசு

'புதிதாக வந்துள்ள அரசாங்கத்தின் (நரேந்திர மோடி அரசு) மீது பாஸிட்டிவ் ஆன சென்டிமென்ட் இருந்தாலும், பணவீக்கம் அதிகமாகவும் மற்றும் நுகர்வோர்களின் தேவைகள் இறுக்கமாகவுமே உள்ளன', என்று இந்த உலகளாவிய விமான பயண அமைப்பில் சமீபத்திய புள்ளி விபர ஆய்வு தெரிவிக்கிறது.

அதிக பயணிகள்

அதிக பயணிகள்

இந்நிதியாண்டின் துவக்கத்தில் இத்துறையின் வர்த்தம் மந்தமாக இருந்தாலும், விமான டிராபிக்கின் அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. தேவைக்கான காரணிகளின் வளர்ச்சியால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

'சமீபத்திய தகவல்களில் வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஆகியவை பெருகி வருவதாக காட்டப்பட்டுள்ளது, இது சமீபத்திய விமான பயண தேவை அதிகரிப்புகளால் நிலையாகவும் உள்ளது,' என்று IATA தெரிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் மே மாதத்தில் சர்வதேச டிராபிக் புள்ளி விபரங்கள் 7 சதவீதமாக இருந்தன.

இந்தியாவின் நிலை..

இந்தியாவின் நிலை..

அனைத்து மண்டலங்களிலும் 6.2 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, 'முக்கியமாக ஆசியா பஸிபிக் பகுதியில் இந்த வளர்ச்சி 7.3 சதவீதமாக, மே மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.' இந்தியாவில் வெறும் 4 சதவீதம் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

மே மாதம்

மே மாதம்

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், உள்நாட்டு விமான பயணத்தின் அளவு 4.6 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதில் பல்வேறு சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபட்ட செயல்திறன் தொடர்ந்து வருவதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

சீனா

சீனா

சீனா மற்றும் ரஷ்யா போன்ற சில BRIC (Brazil, Russia, India and China) நாடுகளின் வளர்ச்சி இரட்டை இலக்கங்களுக்கு அருகிலும் அல்லது இரட்டை இலகத்திலுமாக முறையே 9.4 மற்றும் 13.2 சதவீதமாக உள்ளது. இவ்விரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி போதுமான அளவிற்கு உள்ளதால், உள்நாட்டு விமான பயணத்தில் உறுதியான விரிவாக்கம் செய்வது நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian air travel market grows by 'muted' 4% in May

Indian air travel market showed a "muted" four per cent growth in May, even as overall global air traffic rose by a strong 6.2 per cent, latest figures showed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X