மிட்சுபிஷி நிறுவனத்துடனான டிசிஎஸ் ஒப்பந்தத்திற்கு பச்சை கொடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டாடா கன்சல்டன்சி நிறுவனமும், ஜப்பானின் மிட்சுபிஷி கார்ப்பரேஷன் நிறுவனமும் சேர்ந்து துவங்க இருக்கும் புதிய தொழில் ஒப்பந்தத்தினால் இந்தியாவின் போட்டிக்கு தீங்கு விளையாது என்று முறையான வணிகத்திற்கான பொறுப்புகளை கவனித்து வரும் CCI அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆசியா பஸிபிக் பிரைவேட் லிமிடெட் (TCS APAC) மற்றும் ஜப்பானின் மாபெரும் மிட்சுபிஷி நிறுவனமும் சேர்ந்து, ஜப்பானில் அமைக்க இருக்கும் இந்த கூட்டு முயற்சியில், டாடா நிறுவனம் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஏப்ரல் மாதத்தில், ஜப்பானிலுள்ள இரண்டு யூனிட்களை மிட்சுபிஷி நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இணைத்து ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

பச்சை கொடி

பச்சை கொடி

இந்த ஒப்பந்தத்தின் படி எதிர்பார்க்கப்படும் விற்பனை மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் போட்டி நிலையில் எந்தவிதமாக தீய விளைவுகளும் ஏற்படாது, என்று இதற்கு பச்சைக் கொடி காட்டிய இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India - CCI) குறிப்பிட்டுள்ளது.

இது வேற... அது வேற..

இது வேற... அது வேற..

'முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சியானது (Joint Venture) தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த துறைகளைச் சேர்ந்ததாகும். TCS ஜப்பான், நிப்பான் டிசிஎஸ், ITF மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள் எந்தவிதமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளையும் இந்தியாவில் வழங்கவில்லை என்பதை கவனித்திருக்கிறோம்.

அதேபோல டிசிஎஸ்வும்..
 

அதேபோல டிசிஎஸ்வும்..

அதே வகையில், TCS APAC-ம் எந்த விதமான சேவைகளையும் இந்தியாவில் வழங்கவில்லை. 'எனவே, முன்மொழியப்பட்டுள்ள கூட்டு முயற்சியால், இந்தியாவின் போட்டித் திறனுக்கு எந்தவித தீங்குகளும் ஏற்படாது' என்று CCI-ன் ஜீன் 26-ம் தேதியிட்ட பொது ஆணை தெரிவிக்கிறது.

நிப்பான டிசிஎஸ்

நிப்பான டிசிஎஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த TCS APAC, டி.சி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனமாகும், நிப்பான் டி.சி.எஸ் சென்டர் லிமிடெட் என்றழைக்கப்படும் நிப்பான் டி.சி.எஸ் நிறுவனத்தில் 60 சதவீத பங்குகள் டி.சி.எஸ் நிறுவனத்திற்கும், மீதமுள்ள 40 சதவீதம் மிட்சுபிஷி நிறுவனத்திற்கும் சொந்தம் என்ற நிலையிலுள்ள கூட்டு முயற்சியாகும்.

மிட்சுபிஷி கார்ப் நிறுவனம்

மிட்சுபிஷி கார்ப் நிறுவனம்

இந்தியாவில், இரசாயனம், மின்சாரம் என பல்வேறு வகைப்பட்ட துறைகளில் ஆர்வாம் காட்டி வரும் மிட்சுபிஷி கார்ப் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் மட்டும் இன்னும் கால் பதிக்காமல் இருந்தது.

இணைப்பு

இணைப்பு

இந்த ஒப்பந்தப்படி, TCS ஜப்பான் நிறுவனம், நிப்பான் டிசிஎஸ்-ல் மிட்சுபிஷி கார்ப் நிறுவனம் வைத்திருக்கும் 40 சதவீத பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தை தன்னுடைய 100 சதவீத துணை நிறுவமாக்கி விடும். இரண்டாவது கட்டத்தில், நிப்பான் TCS நிறுவனம்,. TCS ஜப்பான்-உடன் இணைக்கப்பட்டு விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS-Mitsubishi's Japanese joint venture deal gets CCI nod

Fair trade watchdog CCI has cleared the proposed joint venture between Tata Consultancy Services and Mitsubishi Corp, saying the deal would not have adverse impact on competition in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X