இந்தியாவில் புல்லட் ரயில் பறக்குமா?? ரயில்வே பட்ஜெட் 2014

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதை ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய் கிழமை காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஏற்கனவே இந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறையை மேம்படுத்த சுமார் 5.6 இலட்சம் கோடி தேவை என அவர் தெரவித்திருக்கும் நிலையில் அவரது பட்ஜெட் குறித்து மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

மக்களின் ஆர்வம் வீண் ஆகாமல் இருக்க இவரது பட்ஜெட்டில் ஒரு விஷயம் இருக்கிறது. இந்தியாவில் அதிவேக ரயில் இயக்கப்படுமா என்பது இன்றளவும் ஒரு வேள்வி குறியாகவே உள்ள நிலையில், அதை சாத்திய படும் நோக்கில் மும்பை-அகமதாபாத் இடையே அதிவேக ரயிலை இயக்கவதற்கான அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கபப்படுகிறது.

நான்கு நகரங்கள்

நான்கு நகரங்கள்

இத்தகைய புல்லட் ரயில்கள் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கப்படும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது. இத்தகைய ரயில்கள் சுமார் 534கிலோமீட்டர் தூரத்தை 320 கிலோமீட்டர் வேகத்தில் 2 மணி நேரத்தில் கடந்து விடும்.

ஜப்பான்

ஜப்பான்

இந்த திட்டத்தை ஜப்பான் நிறுவனம் தலைமை வகித்து செயல்படுத்தி வருவதாக தெரிகிறது, மேலும் அது குறித்த, செய்தி அறிக்கையும் ஜாப்பான் நிறுவனம் மத்திய அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் இந்த ரயில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து துவங்குகிறது.

நிறுத்தங்கள்

நிறுத்தங்கள்

இந்த 534 கிலோமீட்டர் பயணத்தில் வேகத்தை நிலைநாட்ட வெறும் 5 நிறுத்தங்கள் மட்டுமே இருக்குமாறு விடிவமைக்கபட்டுள்ளது.

ரயில்வே நிலையங்கள்
 

ரயில்வே நிலையங்கள்

இத்தகைய ரயில்களுக்கு பிரத்தியேகமான ரயில் நிறுத்தங்கள் தேவைப்படும் நிலையில் அகமதாபாத்தில் ரயில் நிலையத்தை அமைக்கப்படும் இடம் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் மும்பையில் இதற்கான நிலையம் உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rail Budget to push Mumbai-Ahmedabad bullet train

The first Mumbai-Ahmedabad high-speed train proposal may get a push in the new government's maiden rail budget, considering Prime Minister Narendra Modi's promise of a diamond quadrilateral of bullet trains to connect the four major cities of Mumbai, Delhi, Kolkata and Chennai.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X