ரயில்வே பயணிகள் சேவையில் சதானந்த கவுடா புரட்சி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரயில் பணிகளின் வசதிகளை மேம்படுத்த பெரும் தொகையை ஒதுக்கியுள்ளார். அதில் முக்கிய ரயில் நிலையங்களை விரவாக்கம் செய்தல், பயணிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், என பல திட்டங்கள் இடம் பெறுள்ளன.

 

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள்

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், வயதானோருக்கு பேட்டரி கார்கள் சேவைகள் அளிப்பது, நடை மேடையை மேம்படுத்துதல், தண்ணீர், கழிப்பறை, போன்ற மிகவும் அத்திவசிய தேவைகளை இந்தியா முழுவதும் உள்ள ரியல் நிலையங்களில் மேம்படுத்துதல்.

ஆன்லைன் புக்கிங்

ஆன்லைன் புக்கிங்

ஜ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் புக்க செய்ய நாம்படும் கஷ்டத்தை புரிந்து கொண்ட கவுடா, இதை முற்றிலும் மேம்படுத்த முடிவு செய்துள்ளார். தற்போது ஒரு நிமிடத்திற்கு 2000 டிக்கெட் மட்டுமே பதிவு செய்யும் திறன் கொண்ட சிஸ்டத்தை நிமிடத்திற்கு 7200 டிக்கெட் வரை முந்பதிவு செய்யும் திறன் கொண்டதாக மாற்ற உள்ளார்.

ஆன்லைன் உபயோகம்
 

ஆன்லைன் உபயோகம்

புதிய மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு அமைப்பில் நொடிக்கு சுமார் 20 இலட்சம் பேர் உபயோகபடுத்த முடியும். இதனால் பயணிகள் ஒரு டிக்கெட் முதல் ஒரு கோச் முழுவதும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

அன்-ரிசர்வ் மற்றும் பிலாட்பாம் டிக்கெட்

அன்-ரிசர்வ் மற்றும் பிலாட்பாம் டிக்கெட்

ரயில் முன்பதிவு டிக்கெட் மட்டும் அல்லாமல் unreserved மற்றும் platform டிக்கெட்களும் கூட ஆன்லைன் மூலம் பெறலாம்.

கேட்டரிங்

கேட்டரிங்

மேலும் ரயில்களில் சுகாதாரமான உணவுகளை செய்வும், பயணிகளுக்கு அளிக்கவும் ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனங்களுக்கு கான்டிராக்ட் அளிக்கப்படும் எனவும் அறிவித்தார். இச்சேவையில் தரம் குறைவாக இருந்தால் ஒப்பந்தம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுத்தம்

சுத்தம்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள, பணிகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதம் சுத்தத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

வை-பை மற்றும் டிராக்கிங்

வை-பை மற்றும் டிராக்கிங்

விமானத்தில் வை-பை சேவை வழங்குவது போல ரயில்களிலும் வை-பை மற்றும் ரயில் டிராக்கிங் சேவையை அளிக்கவும் முடிவு செய்யதுள்ளது ரயில்வே அமைச்சகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Restructuring passengers amenities in railway sector

Restructuring passengers amenities in railway sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X