ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்தது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உறுதியான பங்கு சந்தையின் அணிவகுப்பில், இலாவகமாக சவாரி செய்து கொண்டு, பல்வேறு வகையான வியாபாரங்களை செய்து வரும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியனை தாண்டியுள்ளது. இந்த குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்கு விலைகளும் வேகமாக உயர்ந்ததால், இவ்வளர்ச்சியை அனில் அம்பானி தலைமையிலான குழுமம் பெற்றுள்ளது.

 

கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் கரடியின்-முட்டுக்கட்டையால் ரூ.50,000 கோடிகள் அளவிற்கு சந்தை மூலதனம் குறைந்து போய் இருந்த வேளையில், அனில் அம்பானி குழுமத்திற்கு இது மிகவும் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மும்பை பங்குச் சந்தையில் அண்மையில் கிடைத்த தகவல்கள் படி, ரிலையன்ஸ் குழுமத்தைத் தாங்கி நிற்கும் பட்டியலில் உள்ள 4 நிறுவனங்களின் கூட்டு மதிப்பு ரூ.1,01,832 கோடிகளாகும். இரண்டு மாதங்களில் கால் பங்கிற்கும் மேலான வளர்ச்சியைக் கண்டுள்ளது இந்த குழுமம்.

நான்கு நிறுவனங்கள்

நான்கு நிறுவனங்கள்

பங்குச் சந்தையில் பட்டியலில் உள்ள இக்குழுமத்தின் நான்கு நிறுவனங்களில், தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.34,377 கோடிகளுடன் முதலிடத்திலும், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ.30,548 கோடிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதை தொடர்ந்து ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் ரூ.20,797 கோடிகளுடன் சந்தையின் முன்னணி இடத்திலும் மற்றும் ரிலையன்ஸின் நிதி சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல் ரூ.16,110 கோடிகளுடனும் உள்ளன.

சந்தையின் நிலை
 

சந்தையின் நிலை

சமீப மாதங்களாக, சந்தைகள் ஏறுமுகத்தில் இருப்பதால், நேர்மறையான மனநிலையும் மற்றும் தேர்தலுக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளை உறுதியாக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

26,000 புள்ளிகள்

26,000 புள்ளிகள்

வெள்ளிக்கிழமையன்று, பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்றிலேயே மிகவும் அதிகமாக 25,962.06 புள்ளிகளுடன், அதாவது 26000 புள்ளிகளுக்கு 38 புள்ளிகளே குறைவாக இருக்குமாறு முடிவடைந்தது.

ஒட்டு மொத்த மூலதனம்

ஒட்டு மொத்த மூலதனம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.92 இலட்சம் கோடிகளையும் தாண்டி விட்டது.

 டாப் 4 நிறுவனங்கள்

டாப் 4 நிறுவனங்கள்

பெரிய குழுமங்களில், டாடா நிறுவனம் ரூ.8 இலட்சம் கோடிகளுடன் இப்பொழுது நாட்டிலேய மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாகவும், ரூ.3.7 இலட்சம் கோடிகளுடன் ர்னுகுஊ குழுமம் இரண்டாவது இடத்திலும் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஜ் குழுமம் ரூ.3.35 கோடிகளுடனும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani-led Reliance Group crosses 1-trillion market cap

Riding on a strong stock market rally, Anil Ambani—led diversified business conglomerate Reliance Group has crossed Rs. one lakh crore market valuation as share prices of all its companies have gained sharply.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X