8% வளர்ச்சியை நோக்கி பயணம் செய்ய உதவும் மத்திய பட்ஜெட்!! அருண் ஜேட்லி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தனது மத்திய பட்ஜெட்டுக்கான உரையை துவங்கி இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக குறைவான வேலைவாய்ப்பு மற்றும் கடுமையான வலைவாசி உயர்வு ஆகியவையே என அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் வளரச்சி மிகவும் குறைவாக 5 சதவீதத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதானால் நாட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் அவர் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது "சிதம்பரம் அவர்கள் விட்டுச் சென்ற சவால்கள் சதாரணமாது இல்லை மிகவும் கடுமையாது" என அருண் ஜேட்லி தெரவித்தார்.

(மத்திய பட்ஜெட்ல அப்படி என்ன தாங்க இருக்கு??)

கணிப்புகள்

கணிப்புகள்

நாம் அனைவரும் கணித்தவாறு இந்த மத்திய பட்ஜெட் வளர்ச்சி, நிதி திரட்டல், உள் கட்டுமானம் ஆகியவை சார்ந்தே உள்ளது. இந்த உரையில் அருண் ஜேட்லி நாட்டின் நிதி நிலைமையை குறித்து "வருங்கால தலைமுறைக்கு வெறும் கடனை மட்டும் விட்டு செல்ல முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.

நிதிபற்றாக்குறை மற்றும் நாட்டின் வளர்ச்சி

நிதிபற்றாக்குறை மற்றும் நாட்டின் வளர்ச்சி

தற்போது நாட்டின் நிதிபற்றாக்குறை 4.1 சதவீதமாக உள்ளது, அதை கூடிய விரைவில் 3.0 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகளையும் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரவித்தார். மேலும் நாட்டின் வளர்ச்சி கடந்த 2 ஆண்டகளாக 5 சதவீதத்தில் உள்ளது, அதை 7-8 சதவீத என்ற இலக்குடன் செயல்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உணவு பணவீக்கம்
 

உணவு பணவீக்கம்

மேலும் நாட்டில் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் உணவு பணவீக்கத்தை குறைக்க பல திட்டங்களை வகுத்துள்ளோம். பருவ மழை பெய்யாதது உணவு பணவீக்கத்தை மேலும் கடுமையாக்கியது. இந்நிலையில் வெங்காயம் மற்றும் உருளைகிழங்கின் விலையை குறைக்க அதிகளவில் இறக்குமதி செய்ய உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மானியம்

மானியம்

நாட்டு மக்களுக்கு எரிபொருள், கேஸ் சிலிண்டர்கலள் மிதான மானியத்தை முறையாக கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் ஜேட்லி தெரிவித்தார்.

வறுமை

வறுமை

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் அதிகளவில் மக்கள் உள்ளனர், அவர்களின் வாழ்வியல் முன்னேற பல திட்டங்களை வகுத்துள்ளோம். நாட்டில் வறுமையை ஒழிப்பது எங்களது தலையாய கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Arun Jaitley's maiden budget today to spell out Narendra Modi's vision

Arun Jaitley’s maiden budget today to spell out Narendra Modi’s vision
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X