ஆன்லைன் விற்பனை சந்தையில் இறங்கிய டாடா டோகோமோ
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான டாடா டோக்கோமோ தனது வாடிக்கையாளர்கள் தனது சேவை மேலும் எளிமையாக பெற ஆன்லைன் சில்லறை வணிகத்தில் இறங்கியுள்ளது. இதில் புதிய சிம் கார்டு, டாடா போட்டான் போன்ற சேவைகளை அளிக்க உள்ளது.

இந்த தளம் இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய விற்பனை வாய்ப்பை அமைத்து தரும் என தெரிவித்துள்ளது. மேலும் இத்தளம் அடுத்த 18-24 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை பெறும் என்று டாடா டோக்கோமோ தெரிவித்துள்ளது.
இந்த ஈ-ஷாப் முழுமையாக வாடிக்கையாளருக்கும் ஆன்லைன் சேவையை அளிக்கும் நோக்குடன் துவங்கப்பட்டது. இத்தகைய சேவையை இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் இதுவரை அளித்தது இல்லை எனவும் டாடா டோக்கோமோ நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்தின் தலைவர் பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications