இந்தியாவில் திருட்டு வழக்குகள் எண்ணிக்கை தொடர் உயர்வு.. உஷார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தேசிய குற்ற பிரிவின் தகவல் படி 2013ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ரூ.13,219 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 வருடங்களில் நிகழந்த திருட்டுகளின் மதிப்பில் இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

 

இந்த திருட்டுகளில் போலீஸ்சாரால் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெறும் 1,762 கோடி மட்டுமே என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் திருட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்??

காரணம்

காரணம்

அதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் "கடந்த பத்து வருடங்களில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே இத்தகைய திருட்டிற்கு முக்கிய காரணம்." என அவர் தெரிவித்தார்.

வாகனங்கள்

வாகனங்கள்

மேலும் இந்த திருட்டு வழக்குகளில் அதிகளவு இருப்பது வாகனங்களே. குறிப்பாக நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகளவு வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது. மேலும் இந்த 13,000 கோடி திருட்டில் 30 சதவீதம் வாகனங்கள் சார்ந்த திருட்டாகவே உள்ளது.

சென்னை

சென்னை

மேலும் சென்னையில் வாகனங்கள், மொபைல் போன், லாப்டாப் போன்ற மக்கள் அதிக விலையில் பயன்படுத்தக்கூட பல பொருட்களை திருடப்பட்டு வருகிறது. எனவே மக்கள் பொது இடங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012ஆம் ஆண்டு
 

2012ஆம் ஆண்டு

கடந்த 15 ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டு சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தேசிய குற்ற பிரிவு தெரிவித்துள்ளது. இது உண்மையிலே மிகவும் மோசமான நிலை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Valuables worth ₹13,000 cr stolen in 2013

The year 2013 witnessed theft of valuables worth ₹13,219 crore as per data of the National Crime Records Bureau.
Story first published: Monday, July 14, 2014, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X